twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தளபதி 67 LCU கான்செப்ட் தான்... நோ சொன்ன விஜய்: ஃபஹத் பாசில் சொன்னது என்னாச்சு?

    |

    சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

    காஷ்மீரில் நடைபெறவுள்ள படப்பிடிப்புக்காக தளபதி 67 படக்குழு நேற்று சென்னையில் இருந்து தனி ஜெட் விமானத்தில் சென்றது.

    மேலும், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், த்ரிஷா உள்ளிட்டோர் தளபதி 67ல் நடிப்பதும் உறுதியானது.

    முன்னதாக தளபதி 67 கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் அடுத்த பாகமாக உருவாகவுள்ளதாகவும், அதில் தானும் நடிக்கலாம் என்றும் பஹத் பாசில் கூறியிருந்தார்.

    தளபதி 67 படம் எல்சியூவே இல்லையா? கடைசி வரை ஓகே சொல்லாத விஜய்.. இது ஸ்டாண்ட் அலோன் படம் தான்? தளபதி 67 படம் எல்சியூவே இல்லையா? கடைசி வரை ஓகே சொல்லாத விஜய்.. இது ஸ்டாண்ட் அலோன் படம் தான்?

     காஷ்மீர் சென்ற படக்குழு

    காஷ்மீர் சென்ற படக்குழு

    வாரிசு படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே விஜய்யின் தளபதி 67 அப்டேட்காக ரசிகர்கள் காத்திருந்தனர். கடந்த மாதமே சென்னையில் தளபதி 67 ஷூட்டிங் தொடங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்றிலிருந்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. முதலில் தளபதி 67 படக்குழு காஷ்மீர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்தன. அதனைத் தொடர்ந்து அதில் கமிட்டான நடிகர்கள் அடுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.

     மிகப் பெரிய கூட்டணி

    மிகப் பெரிய கூட்டணி

    லோகேஷ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது ஏற்கனவே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் ஆகியோர், தளபதி 67ல் கமிட் ஆனதை உறுதி செய்தனர். இறுதியாக தற்போது த்ரிஷாவும் விஜய்யுடன் நடிப்பதை படக்குழு அறிவித்துள்ளது. அதில், விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் த்ரிஷா நடித்திருந்த காட்சிகளின் தொகுப்புடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

     ஃபஹத் பாசில் சொன்ன அப்டேட்?

    ஃபஹத் பாசில் சொன்ன அப்டேட்?

    முன்னதாக விக்ரம் படத்தில் அமர் என்ற ஸ்பை கேரக்டரில் நடித்திருந்த ஃபஹத் பாசில், தளபதி 67ல் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து அவரே சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதில், லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகும் தளபதி 67, விக்ரம் படத்தின் சீக்வெல்லாக இருக்கும், அதனால் தானும் அந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறியிருந்தார். இதனால் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிய நிலையில், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

     விஜய் தான் காரணமா?

    விஜய் தான் காரணமா?

    தளபதி 67 படம் குறித்த கதையை விஜய்யிடம் லோகேஷ் முதலில் சொன்னபோது, அது LCU கான்செப்ட்டில் தான் இருந்ததாம். அதனால் விக்ரம் படத்தின் அடுத்த பாகமாக தளபதி 67 உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஐடியா வேண்டாம் என விஜய் உறுதியாக தடுத்து விட்டதாகவும், அதற்கு பதிலாக புதிய யுனிவர்ஸ் கார்ன்செப்ட் இருக்கலாம் எனக் கூறிவிட்டாராம். அதனால், தளபதி 67 புதிய கான்செப்ட்டில் இருக்கும் என்பதால் ஃபஹத் பாசில் இதில் நடிக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ரோலக்ஸ், கார்த்தியின் டெல்லி கேரக்டர்களும் தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

    English summary
    Lokesh Kanagaraj will direct Vijay's Thalapathy 67 film. The shooting of this film started in Chennai. The update of this film is released successively. In this case, Fahadh Faasil had said that he would act in the Thalapathy 67 LCU concept. But now it is said that there is no chance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X