Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வைன் போன்ற பகத்.. கணவனின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய நஸ்ரியா.. கேண்டில் லைட் டின்னரா மேடம்?
கொச்சி : நடிகை நஸ்ரியா நாசிம் தமிழில் நேரம் படத்தில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார்.
தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் நடித்துவந்த நஸ்ரியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இதனிடையே பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.
பொன்னியின் செல்வன் நாயகிக்கு அடித்த ஜாக்பாட்.. தளபதி 67ல இவங்க தான் ஹீரோயினா?

நடிகை நஸ்ரியா நாசிம்
நடிகை நஸ்ரியா நாசிம் நேரம் என்ற படத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நிலையில் முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் சிறப்பான வாய்ப்புகளை பெற்றார்.

தமிழில் அடுத்தடுத்த படங்கள்
தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சிறப்பான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். குறிப்பாக தமிழில் ராஜா ராணி படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. சுட்டியான இந்தக் கேரக்டர் சிறிது நேரத்திலேயே விபத்தில் உயிரிழக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

பகத் பாசிலுடன் திருமணம்
இதுபோன்ற சிறப்பான படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன நஸ்ரியா, தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்பட்டார். தொடர்ந்து பல பதிவுகளை இட்டு, ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.

மீண்டும் நடிப்பு
இந்நிலையில் சமீபத்தில் சில மலையாள படங்களில் நடித்த இவர், தொடர்ந்து அடடே சுந்தரா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நானியுடன் இணைந்து இவர் நடித்திருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கில் இந்தப் படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை நஸ்ரியாவிற்கு பெற்றுக் கொடுத்தது.

பகத்தின் 40வது பிறந்தநாள்
இந்நிலையில் இன்றைய தினம் பகத் ஃபாசிலின் 40வது பிறந்தநாளையொட்டி அவருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த நஸ்ரியா, அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடைய கணவர் வைனை போன்றவர் என்றும் வயது ஏற ஏற சிறப்பாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் அவருக்கு வரவேண்டியது அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மலையன்குஞ்சு படம்
பகத் பாசில் நடிப்பில் அடுத்தடுத்த பல படங்கள் வெளியாகி வருகின்றன. புஷ்பா, விக்ரம் வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது மலையன்குஞ்சு இன்னும் சில தினங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.