twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சொந்த வாழ்க்கையில் மட்டும் தான் சொதப்பல்: ஹாலிவுட் வரை அசால்ட் செய்யும் அசுரன் தனுஷ்!

    |

    சென்னை: நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கையில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளார்.

    தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், தற்போது பிரிந்துவிட்டனர்.

    சொந்த வாழ்க்கையில் தோல்வியடைந்தாலும், கோலிவுட்,டில் இருந்து பாலிவுட் இப்போது ஹாலிவுட் என அசத்தி வருகிறார்.

    2002ம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தில் இளமைத் துள்ளலுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனுஷ். ஹீரோவுக்கான எந்த வசீகரமும் இல்லையென அவர் மீது விமர்சனங்கள் எழுந்தபோதும், துவண்டு விடாமல் தனது திரைப் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருந்தார். அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள், அடுத்து வரப் போகும் 20 ஆண்டுகளில் அவரின் உயரம் எப்படி இருக்கும் என்று.

     அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களை வணக்கம் போட வைத்த தனுஷ்.. களைகட்டிய 'தி கிரே மேன்’ புரமோஷன்! அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களை வணக்கம் போட வைத்த தனுஷ்.. களைகட்டிய 'தி கிரே மேன்’ புரமோஷன்!

    தம்பியை பட்டைத் தீட்டிய அண்ணன்

    தம்பியை பட்டைத் தீட்டிய அண்ணன்

    தனுஷின் இரண்டாவது படமான 'காதல் கொண்டேன்' படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், செல்வராகவன் தனுஷை பட்டைத் தீட்டத் துவங்கிய காலம் அது எனலாம். காரணம் அடுத்ததாக அவர்கள் கூட்டணியில் வெளியான 'புதுப்பேட்டை' தமிழ் சினிமாவின் தங்க முட்டையாக இன்றும் கொண்டாடப்படுகிறது. தனுஷை மிகத் துல்லியமாக அளவீடு செய்து வைத்திருந்தார் செல்வராகவன்.

    நடுவுல கொஞ்சம் வீராப்பு

    நடுவுல கொஞ்சம் வீராப்பு

    கமர்சியல் படங்களில் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை தனுஷையும் விட்டுவைக்கவில்லை. புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற இன்னும் சில படங்கள் தனுஷுக்கு மிகப் பெரிய தோல்வியைக் கொடுத்தன. இதனால் மீண்டும் கடும் விமர்சனங்களுக்குள் சிக்கிச் சின்னாப்பின்னமானார் தனுஷ்.

    தனுஷை மீட்டெடுத்த வெற்றிமாறன்

    தனுஷை மீட்டெடுத்த வெற்றிமாறன்

    செல்வராகவனுக்குப் பிறகு தனுஷின் நடிப்பை சரியாக வெளிப்படுத்த பல இயக்குநர்கள் தவறினர். அந்நேரம் அவருடன் பொல்லாதவன் படத்தில் கூட்டணி வைத்த இயக்குநர் வெற்றிமாறன், தனுஷின் நடிப்பை அங்குலம் அங்குலமாக கூறுபோட்டார். அங்கிருந்து தொடங்கிய இந்த வெற்றிக் கூட்டணி, அடுத்தடுத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என சிக்ஸர்களாக வெளுத்து வாங்கியது.

    காதல்… கல்யாணம்…. பிரிவு

    காதல்… கல்யாணம்…. பிரிவு

    சினிமாவில் அறிமுகமான இரண்டே வருடங்களில் ஐஸ்வர்யாவுடன் காதலில் விழுந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனானார் தனுஷ். இதனை கோலிவுட்டே வாயைப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருக்க, தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினர். ஐஸ்வர்யா இயக்குநராகவும் சாதித்துக் காட்டினார். இரண்டு மகன்களுடன் ஜாலியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கை, திடீரென பிரிவில் சென்று முடிந்தது

    கோலிவுட்… பாலிவுட்… ஹாலிவுட்…

    கோலிவுட்… பாலிவுட்… ஹாலிவுட்…

    தனுஷால் கோடம்பாக்கத்தில் தாக்குப் பிடிப்பதே முடியாத காரியம் என பலரும் வசைபாடிக் கொண்டிருக்க, அவரோ பாலிவுட் சென்று இந்தி ரசிகர்களையும் பதம் பார்த்தார். இதுவே தனுஷின் உச்சம் என நினைத்துக் கொண்டிருந்த பலரையும், இன்று ஹாலிவுட் வரை சென்று கெத்து காட்டியுள்ளார். அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, அகங்காரமற்ற நடிப்பு என தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட தனுஷ், தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாகிப் போனது பெரும் சாதனையே.!

    English summary
    Description: Even though actor Dhanush faced failure in his own life, he has made a record in acting in Kollywood, Bollywood, and Hollywood :நடிகர் தனுஷ் தனது சொந்த வாழ்வில் தோல்வியைத் தழுவினாலும், நடிப்பில் கோலிவுட், பாலிவுட் என இப்போது ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்துள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X