»   »  ஏம்மா டிடி, ட்விட்டரில் உங்க பெயரில் என்ன நடக்குதுன்னு தெரியுமா?

ஏம்மா டிடி, ட்விட்டரில் உங்க பெயரில் என்ன நடக்குதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியின் பெயரில் ட்விட்டரில் ஒரு டுபாக்கூர் உலவி வருகிறார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார் டிடி.

போலி

போலி

ட்விட்டரில் டிடியின் பெயரில் போலி கணக்கு ஒன்று உள்ளது. அந்த போலி கணக்கு பார்க்க அச்சு அசலாக டிடியின் ட்விட்டர் கணக்கு போன்றே உள்ளது.

டிடி

டிடி

தனது பெயரில் வேறு ஒரு போலி கணக்கு இருப்பதை கண்டுபிடித்து ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார் டிடி. ஆனால் அவருக்கு இந்த டுபாக்கூர் கணக்கு பற்றி தெரியவில்லையா?

பிரபலங்கள்

பிரபலங்கள்

பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் இருப்பது புதிது அல்ல. சில பிரபலங்களுக்கே தெரியாமல் போலி கணக்குகள் உள்ளன.

கமல்

கமல்

தமிழக அரசியல் சூழலில் நேற்று ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்வீட்டினார். இதை பார்த்த டுபாக்கூர் டிடி கமலை அரசியலுக்கு அழைத்துள்ளார். இது டுப்பாகூர் டிடியா இல்லை டிடியின் மற்றொரு கணக்கா? ஏனென்றால் சில திரையுலக பிரபலங்கள் கூட டுபாக்கூர் டிடியை பின்தொடர்கிறார்கள்.

English summary
Fake DD alias Dhivya Darshini is quite popular in Twitter. Does real DD knows about it?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil