»   »  என்னது.. சிம்பு படம் அறுபது கோடிக்கு வித்திருச்சா?

என்னது.. சிம்பு படம் அறுபது கோடிக்கு வித்திருச்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என்று கூட யோசிக்காமலே பொய்யைச் சொல்பவர்கள் தமிழ் சினிமாக்காரர்கள். 50 பேரை ஒரு ஒல்லிப்பிச்சான் ஒற்றைக் கையில் அடித்து வீழ்த்தும் லாஜிக் மாதிரிதான் இவர்களின் பொய்களும்.

அப்படி ஒரு பொய்யை இப்போதும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள், சிம்புவின் இது நம்ம ஆளு பட வியாபாரம் தொடர்பாக.


Fake report on Simbu movie business

வெளியாகுமா வெளியாகாதா என்ற இழுபறியில் கிடந்த இது நம்ம ஆளு படத்தை சமீபத்தில்தான் தேனான்டாள் பிலிம்ஸ் வாங்கியது.


இந்த நிலையில் அந்தப் படம் அறுபது கோடி ரூபாய்க்கு விற்பனையாகிவிட்டதாக சிலர் செய்தி வாசிக்க, அதிர்ந்து போய்விட்டனர் சினிமா வியாபாரம் தெரிந்தவர்கள்.


Fake report on Simbu movie business

உண்மை நிலவரம் என்னவென்று விசாரிக்கையில், அந்தப் படம் இதுவரை ரூ 12 கோடி வரைதான் விற்பனையாகியுள்ளதாம் ( படத்தில் நயன்தாரா சம்பளமே ரூ 2.5 கோடிங்க!).


படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னமும் விற்பனையாகவில்லையாம். சமீப காலமாக படம் வெளியாகி ஓரளவு ஓடினால்தான் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகிறது.


உண்மை இப்படி இருக்க, இந்த பொய்த் தகவலை சிம்புவின் ஆதரவாளர்கள் வேகவேகமாக பரப்பி வருகிறார்கள்.

English summary
There is a fake report on Simbu's Ithu Namma Aalu movie business rounds in media.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil