»   »  6 மணிக்குள் கணவருடன் பேசி சமாதானமாகப் போங்க: நடிகை ரம்பாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு

6 மணிக்குள் கணவருடன் பேசி சமாதானமாகப் போங்க: நடிகை ரம்பாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவன், மனைவி இடையேயான பிரச்சனையை இன்று மாலை 6 மணிக்குள் பேசித் தீர்க்குமாறு நடிகை ரம்பாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ரம்பாவுக்கும், கனடாவில் செட்டிலான தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடாவில் செட்டில் ஆனார்.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான அவர் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு இந்தியா வந்துவிட்டார்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

இந்தியா வந்த பிறகு ரம்பா தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக வாழ முடியவில்லை என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

ரம்பா

ரம்பா

ரம்பா மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பா தனது 2 மகள்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

சமரசம்

சமரசம்

மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, கணவனும், மனைவியும் தங்களுக்கு இடையேயான பிரச்சனையை சமரச மையத்தில் வைத்து இன்று மாலை 6 மணிக்குள் பேசித் தீர்க்க வேண்டும் என்றது.

நடிப்பு

நடிப்பு

ரம்பாவுக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்ததால் தான் அவர் கணவரை பிரிந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் கணவருடன் சேர உள்ளார்.

English summary
Chennai high court has ordered actress Rambha to solve out the difference of opinions with her husband today itself.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil