Don't Miss!
- News
"பாய்காட் பதான்".. கொச்சைபடுத்தாதீங்க! பாஜகவினரையே மறைமுகமாக விமர்சித்த மத்திய அமைச்சர் அனுராக்
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த பிரபல தமிழ் நடிகர்.. என்ன காரணம்?
சென்னை : நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி 67 படம் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். வாரிசு படத்தை காட்டிலும் தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காகவே அவர்கள் காத்திருப்பு காணப்படுகிறது.
முன்னதாக தளபதி 67 படத்தின் அறிவிப்பு மற்றும் சூட்டிங் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாததத்தில் வெளியாகவுள்ளதாக லோகேஷ் அறிவித்திருந்தார்.
வாரிசு செட்டில் இருந்து வேகமாக வெளியேறிய விஜய்… ட்ரெய்லர் ரிலீஸ் தேதியுடன் வந்த வம்ஷி பைடிபள்ளி!

நடிகர் விஜய்யின் வாரிசு
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் வாரிசு படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அடுத்தடுத்த அப்டேட்கள்
இதனிடையே இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவரும் சூழலில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் விஜய். தற்காலிகமாக தளபதி 67 என இந்தப் படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

தளபதி 67 படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்
இந்தப் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாமல் தயாரிப்புத் தரப்பு காலம் தாழ்த்தி ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருகிறது. ஆயினும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டும் படம் குறித்த அப்டேட்களை சூசகமாக தெரிவித்து வருகிறார். இதனிடையே இந்தப் படத்தின் பூஜை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

5ம் தேதி தளபதி 67 படத்தின் பூஜை?
வாரிசு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், தளபதி 67 படத்தின் பூஜை வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையாக போடப்பட உள்ளதாகவும் விஜய், லோகேஷ் உள்ளிட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைட்டில் டீசரும் வெளியீடு
இதையடுத்து விக்ரம் பட பாணியில் வரும் 7ம் தேதி தளபதி 67 படத்தின் டைட்டில் டீசரின் சூட்டிங்கையும் லோகேஷ் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதேபோல சென்னையில் துவங்கவுள்ள படத்தின் சூட்டிங் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு படக்குழு செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்
இதனிடையே இந்தப் படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் அவர் இந்தப் படத்தின் வாய்ப்பை மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மூட்டுவலி காரணமாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதன் காரணமாகவே தளபதி 67 படத்தின் வாய்ப்பை அவர் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.