இந்தியன் 2 ஷுட்டிங்கிற்காக சென்னை வந்த பிரபல நடிகை...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை : கொரோனா, வழக்கு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியன் 2' படத்தின் ஷுட்டிங், தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

Recommended Video

Vikram பட வசூல் சாதனை... கொண்டாட்ட மனநிலையில் KamalHaasan *Kollywood | Filmibeat Tamil

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் ஷுட்டிங், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் ஈசிஆர் சாலையில் பாபிசிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் பிரியா பவானிசங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமலின் புதிய லுக்

கமலின் புதிய லுக்

இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்காக ஹாலிவுட் மேக்அப் கலைஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்த அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன், செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னை திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவரும் ஷுட்டிங்கில் பங்கேற்பார் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கான கமலின் லேட்டஸ்ட் லுக் போட்டோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இந்தியன் 2 ஷுட்டிங் பிளான்

இந்தியன் 2 ஷுட்டிங் பிளான்

இந்தியன் 2 ஷுட்டிங்கை 120 நாட்களில் நடத்தி முடிக்க டைரக்டர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷுட்டிங்கும் துவங்கி நடந்து வருகிறது. ஆனால் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு ஆகியோருக்கு பதில் யார் நடிக்க போகிறார்கள் என்ற விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதை படக்குழு தொடர்ந்து சஸ்பென்சாக வைத்துள்ளது.

சென்னை வந்த பிரபல நடிகை

சென்னை வந்த பிரபல நடிகை

இந்நிலையில் இந்த ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் சென்னை வந்துள்ளார். இதை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, இந்தியன் 2 படத்திற்காக இங்கே வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.இதனால் அடுத்து இந்தியன் 2 ஷுட்டிங்கில் கலந்து கொள்ள போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அப்டேட் எப்போ வரும்

அப்டேட் எப்போ வரும்

மேலும் இந்த வாரம் காஜல் அகர்வாலும் மும்பையில் இருந்து சென்னைக்கு 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்காக வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடுத்த வாரம் அமெரிக்காவிலிருந்து கமல்ஹாசன் வர உள்ளதால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளி வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X