»   »  பிக்பாஸ் டைட்டில் வென்ற பிரபல நடிகையின் கணவர்! #BiggbossWinner

பிக்பாஸ் டைட்டில் வென்ற பிரபல நடிகையின் கணவர்! #BiggbossWinner

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே : தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வரும் நிலையில், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், கன்னடத்தில் சுதீப்பும் நடத்தி வருகின்றனர்.

'ஜெய் லவ குசா' படத்தில் நடித்துக் கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு நிறைவடைந்து மக்களின் வாக்குகளின் அடைப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.

ஜூனியர் என்.டி.ஆர் :

ஜூனியர் என்.டி.ஆர் :

முதல் எபிசோடில் சூப்பரமாக நடனமாடியபடி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஜூனியர் என்.டி.ஆர், ரொம்ப கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்திப் பெருவாரியான நேயர்களை கவர்ந்து வந்தார்.

நிறைவு பெற்றது :

நிறைவு பெற்றது :

தமிழில் தொடங்கப்பட்டு ஒரு மாதம் கழித்துத் தொடங்கிய தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நேற்றோடு நிறைவு பெற்றது. மா டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் இன்னும் பிரமாண்டமாக விரைவில் தொடங்கப்பட உள்ளதாம்.

வின்னர் :

வின்னர் :

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய இறுதிச்சுற்றில் பிரபல நடிகர் சிவ பாலாஜி வெற்றி பெற்று ரூ. 50 லட்சத்தை கைப்பற்றினார். இவர் நடிகை மதுமிதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் 'இங்கிலீஷ்காரன்' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

அடுத்த சீசன் :

அடுத்த சீசன் :

மேலும், முதல் சீசனின் படப்பிடிப்பை புனேயில் நடத்தி வந்த நிலையில், அடுத்த சீசன் படப்பிடிப்பை ஐதராபாத்திலேயே நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

ரன்னர் :

ரன்னர் :

நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் எபிசோடில் முன்பு எலிமினேட் செய்யப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

English summary
Jr. NTR is conducting Telugu biggboss reality show. The Telugu Biggboss program was completed and the winner was announced. Actress Madhumitha's husband Siva Balaji won the Telugu Biggboss title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil