»   »  அஜித்துக்காக வருத்தப்பட்ட பிரபல காமெடி நடிகர்!

அஜித்துக்காக வருத்தப்பட்ட பிரபல காமெடி நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தெலுங்கில் பெரும் வெற்றிகளைக் கண்ட இயக்குநர் டி.சத்யா இயக்கியிருக்கும் முதல் தமிழ் படம் 'யார் இவன்'. சச்சின் ஜோஷி கதாநாயகனாகவும், இஷா குப்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 15-ம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது பேசிய காமெடி நடிகர் சதீஷ் 'இந்தப்படம் வெற்றியடைவதில் மீடியாக்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம். உங்கள் சப்போர்ட் இல்லாமல் திரைப்படங்களின் வெற்றி சாத்தியமில்லை.'

Famous comedian who regretted for Ajith

மேலும் அவர் பேசுகையில், 'இப்போதெல்லாம் எல்லோரும் வீடியோக்களில் படங்களை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் கூட விவேகம் படத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்திருந்தார்.

அவர் படத்தை மட்டும் திட்டியிருந்தால் பரவாயில்லை, அவ்ளோ பெரிய மனுஷன் அஜித்தை தனிப்பட்ட முறையில் திட்டியது தான் எனக்கு வருத்தமாகி விட்டது. இனிமேலாவது அந்த மாதிரியான விமர்சனங்களைத் தவிர்த்து படத்தின் வெற்றிக்கு சப்போர்ட் பண்ணுங்க' என்றார்.

English summary
Comedian Sathish has come in support of Ajith as one man criticised him in the name of film review.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil