Don't Miss!
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Automobiles
டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கார் விபத்தால் கோமாவில் இருந்த பிரபல ஹாலிவுட் நடிகையின் உயிர்பிரிந்தது: அம்மாவை நினைத்து உருகிய மகன்
அமெரிக்கா: பிரபல ஹாலிவுட் அன்னே ஹெச் கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருந்தார்.
பார்ட்டிக்குச் சென்றுவிட்டு மது போதையுடன் காரை ஓட்டியதால் தான் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அன்னே ஹெச் உடலில் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால், அவர் கடந்த 6 தினங்களாக கோமாவில் இருந்தார்.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி..மேல்முறையீடும் இல்லை..கனல் கண்ணன் நிலை என்ன? கைதாவாரா?

ரசிகர்களின் கனவுக்கன்னி
ஹாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை அன்னே ஹெச். இவர் 'வால்கோனா', 'ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர்', 'வாக் த டாக்', 'சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ்', 'சைக்கோ', 'கேட் பைட்', 'தி லாஸ்ட் வேர்ல்ட்' உட்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அதேபோல், தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக 'அனதர் வேர்ல்ட்' என்ற அமெரிக்க டிவி தொடரில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர்.

பார்ட்டிக்கு சென்று திரும்பிய அன்னே ஹெச்
தனது 2 மகன்களுடன் வசித்து வந்த அன்னே ஹெச், கடந்த வாரம் அவரது மினி கூப்பர் காரில், லாஸ் ஏஞ்சலுக்கு சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முன்னதாக அவர் பார்ட்டிக்கு சென்று, மது அருந்தியிருந்ததாகவும் தெரிகிறது. மது போதையில் காரை வேகமாக ஓட்டிச் சென்ற அன்னே ஹெச், அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானார் மோதிய வேகத்தில் மினி கூப்பர் கார் தீப்பிடித்து எரிந்தது, வீட்டின் முன்பகுதியும் தீயில் கருகி சேதமானது.

தீக்காயங்களுடன் உயிருக்குப் போராட்டம்.
இந்த விபத்தில் ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் அதிகமான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உயிர் பிழைப்பது கஷ்டம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்த தகவல் அன்னே ஹெச் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

அன்னே ஹெச்சின் உயிர்பிரிந்ததாக அறிவிப்பு
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்னே ஹெச், 11ம் தேதியே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து முழுமையான தகவல் வெளிவரும் முன்னர், இன்று அவர் உயிரிழந்துவிட்டதாக அன்னே ஹெச்சின் மகன் ஹோமர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அன்னே ஹெச்சுக்கு வயது 53. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அன்னே ஹெச் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்னே ஹெச்சின் மகன் உருக்கம்
இதனிடையே "நானும் என் சகோதரனும் அம்மாவை இழந்துவிட்டதாக" அன்னே ஹேச்சின் மகன் ஹோமர் உருக்கமாக கூறியுள்ளார். மேலும், "கடந்த 6 நாட்களாக ரொம்பவே எமோஷனலாக இருந்ததாகவும், அந்நேரத்தில் என் அம்மா மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார். "வாழ்வின் கடினமான 6 நாட்களையும் 7 இரவுகளையும் கடந்து வந்துள்ளோம். ஓய்வெடுங்கள் அம்மா, ஐ லவ் யூ" என உருக்கமாக கூறியுள்ளார் ஹோமர். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.