»   »  உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு உடல்நிலை பாதிப்பு - இசை நிகழ்ச்சி ரத்து!

உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு உடல்நிலை பாதிப்பு - இசை நிகழ்ச்சி ரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி லேடி காகா. பாப் இசையுலகின் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுபவர் காகா. 31 வயதான இவர் இந்த மாதம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் 'ராக் அண்ட் ரியோ' எனும் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடவிருந்தார்.

ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. ஏனெனில் லேடி காகாவிற்கு கடுமையான உடல்வலி ஏற்பட்டுள்ளதால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

famous Pop singer has hospitalized

லேடி காகாவிற்கு உடல்நிலை சரியில்லாத தகவலை அவரே தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார். தனக்குத் தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும் மிகச்சிறந்த மருத்துவர்களின் சிகிச்சையால் வலி தற்போது குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரியோ நகரில் தனக்காக வரவிருந்த ரசிகர்களுக்கு தனது அன்பையும், அவர்களது புரிந்துகொள்ளலுக்கும், ஆதரவுக்கும் நன்றி எனவும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் லேடி காகா.

சமீபத்தில், பாடகி செலினா கோம்ஸுக்கு கிட்னி பாதிக்கப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரபல பாப் பாடகிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பாப் ரசிகர்கள் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.

English summary
Lady Gaga has went to hospital due to severe pain. Her pop music concert was cancelled in Rio city.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil