பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஆர்யன் தினேஷ்… யார் இந்த இலங்கை தமிழ் ராப் சிங்கர்?

சென்னை: ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் ராப் பாடகரான ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் என்ற ADK என்பவரும் ஒருவர்.

காத்திருக்கும் பிக் பாஸ் விருந்து

காத்திருக்கும் பிக் பாஸ் விருந்து

அமெரிக்காவில் தொடங்கிய பிக் பாஸ் கலாச்சாரம் இப்போது இந்தியாவையும் ஆக்கிரமித்து வருகிறது. பாலிவுட்டில் 15 சீசன்களை கடந்துவிட்ட பிக் பாஸ், தமிழில் இப்போது 6வது சீசனை நோக்கி நகர்கிறது. விஜய் டியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அதனால், இந்நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டன. இந்நிலையில், இன்று மாலை 6 மணியில் இருந்து 6வது சீசன் தொடங்குகிறது.

கண்டெண்ட் கண்டெய்னர்

கண்டெண்ட் கண்டெய்னர்

ஓடவும் முடியாத ஒளியவும் முடியாத பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட்களுக்கு பஞ்சமே இருக்காது. மனிதர்களின் உளவியலை தோலுரித்துக் காட்டிவிடும் தன்மை பிக் பாஸுக்கு உள்ளதால், இது வெகுஜன மக்களுக்கு கொண்டாட்டமான களமாக மாறிவிட்டது. இன்னும் மூன்று மாத காலங்களுக்கு பிக் பாஸ் அட்ராசிட்டிகள் தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாக இருக்கும். இன்று தொடங்கும் பிக் பாஸ் சீசன் 6ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர், இவர்களில் இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகரான ஆர்யன் தினேஷும் ஒருவர்.

இலங்கை ராப் பாடகர்

இலங்கை ராப் பாடகர்

2012ம் ஆண்டு வெளியான ஆர்யன் என்ற இசை ஆல்பம் மூலம் கவனம் ஈர்த்தவர் ADK என்ற தினேஷ் கனகரத்தினம். இந்த ஆல்பம் ஹிட் அடித்ததில் இருந்து 'ஆர்யன்' தினேஷ் கனகரத்தினம் என பிரபலமாகிவிட்டார், தற்போது ADK என்ற பெயரில் பாடி வரும் ஆர்யன் தினேஷ், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் ராப் இசைக் கலைஞராக காணப்படுகிறது. இவரை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தமிழிலும் பாட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நிறைய பாடல்கள்

தமிழில் நிறைய பாடல்கள்

'கடல்' படத்தில் இடம்பெற்ற 'மகுடி மகுடி' பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் பாடலில் வரும் ராப் பகுதிகளை ADK தான் பாடியிருந்தார். அதேபோல், அச்சம் என்பது மடமையடா படத்தில் வரும் 'ஷோக்காலி ஷோக்காலி' பாடலின் ராப் போர்ஷனையும் பாடியுள்ளார். அதே படத்தில் 'தள்ளிப்போகாதே' பாடலிலும் ADKவின் குரல் ரசிகர்களை மயக்கியது. தொடர்ந்து ஓகே கண்மணி, லிங்கா படங்களிலும் பாடல்கள் பாடி பிரபலமானவர் ஆர்யன் தினேஷ். மேலும், சந்தோஷ் நாரயணன். தமன், விஜய் ஆண்டனி ஆகியோரின் இசையிலும் ராப் பாடி ரசிகர்களை வசீகரித்தவர் ADK. சமீபத்தில் இவரது தனியிசைப் பாடல்களான Thuppuran, Lityananda, Paddapan ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X