twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல பாடகர் கே.கே மாரடைப்பால் மரணம்.. மேடையில் பாடி முடித்ததும் உயிர் பிரிந்தது

    |

    கொல்கொத்தா: தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் கே.கே மாரடைப்பால் காலமானார்.

    Recommended Video

    Singer KK Passed Away | மேடையில் பாடி முடித்ததும் பிரிந்த உயிர் | #India

    தமிழில் மட்டுமல்ல 11 மொழிகளில் பாடி பிரபலமான இவரை அறிமுகப்படுத்தியது ஏ.ஆர்.ரஹ்மான். காதல் தேசம், மின்சார கனவு என பல படங்களில் பாடியுள்ளார் .

    கொல்கொத்தாவில் மேடையில் கச்சேரியின் இடையே கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    மேடையில் மயங்கி விழுந்து பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !மேடையில் மயங்கி விழுந்து பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !

     ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகம்

    ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகம்

    தமிழில் பிரபலமான பாடல்கள் பலவற்றை பாடியவர் பிரபல பாடகர் கே.கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத். 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் டெல்லியில் பிறந்தார். பிறப்பால் மலையாளியான கே.கே வளர்ந்தது டெல்லி சூழலில். பாப், ராக் பாடல்கள்களில் பிரபலமானார். 1996 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை பாடலில் அறிமுகப்படுத்தினார்.

     11 மொழிகளில் பாடிய திறமை மிக்க பாடகர் கேகே

    11 மொழிகளில் பாடிய திறமை மிக்க பாடகர் கேகே

    அதன் பின்னர் அவர் ஹிந்தி, பெங்காலி, மலையாளம், தெலுங்கு என 11 மொழிகளில் பாடி பிரபலமானாலும் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும், யுவன் சங்கர் ராஜா இசையிலும் பல அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன், மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன் பாடலும் பிரபலம்.

     யுவன் சங்கர் இசையில் இனிமையான, துள்ளல் பாடல்கள்

    யுவன் சங்கர் இசையில் இனிமையான, துள்ளல் பாடல்கள்

    கில்லி, தூள், ஐயா, ரெட், 12 பி, மின்சார கனவு, குருவி, ஜி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், குட்டி, ஒரு கல்லூரி காதல், சிவகாசி, சாமி என பல முன்னணி நடிகர்களுக்காக அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இதே காலக்கட்டத்தில் இந்தியிலும், பெங்காலி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என கொடி கட்டி பறந்தார்.

     இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம்

    இந்தியா முழுவதும் ரசிகர்கள் கூட்டம்

    வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரரான கேகெவின் குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். குறிப்பாக பாலிவுட் உலகில் அவர் குரலுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு முன்னோடி சோனி நிறுவனம் இந்தியில் நடத்தும் சோனி ஐடல் நிகழ்ச்சியின் நடுவராக இருந்துள்ளார். இந்தியா முழுவதும் சுற்றி கச்சேரிகளும் செய்து வந்தார்.

     கொல்கொத்தா சோகம்

    கொல்கொத்தா சோகம்

    அப்படி ஒரு கச்சேரி நேற்று மாலை கொல்கொத்தாவில் நடந்தது. நிக்ழ்ச்சியில் பல அற்புதமான இந்தி பெங்காலி பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் கரகோசத்துக்கிடையே அங்கும் இங்கும் நடந்தப்படி பாடிக்கொண்டிருந்தார். உற்சாகத்துடன் கச்சேரியை முடித்துவிட்டு அறைக்கு திரும்பும் போது நிலைகுலைந்து விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கேகே உயிர் போய் விட்டதாக தெரிவித்தனர்.

     கடுமையான மாரடைப்பு உயிரை பறித்தது

    கடுமையான மாரடைப்பு உயிரை பறித்தது

    கடுமையான மாரடைப்பு காரணமாக கேகே உயிர் பிரிந்துள்ளது. 53 வயதே ஆன கேகே 35 வயது மதிக்கத்தக்க அளவில் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். ஆனால் மரணம் எதிர்பாராதவிதமாக அவரை ஆட்கொண்டுள்ளது. அவரது மரணத்தால் இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

     கடைசியாக பாடியதும் தமிழ் படத்திலேயே

    கடைசியாக பாடியதும் தமிழ் படத்திலேயே

    கே.கேவுக்கு 1991 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அவருக்கு ஜோதி என்கிற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இருவரும் இசைத்துறையிலேயே உள்ளனர். கேகேயின் திடீர் மரணம் தமிழ் ரசிகர்களையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கேகே கடைசியாக பாடிய தமிழ் படம் அண்ணாச்சியின் தி லெஜண்ட். அதில் 2 பாடல்களை பாடியுள்ளார்.

    English summary
    Introduced in Tamil by AR Rahman and popularized by the songs of Yuvan Shankar Raja, the multilingual singer KK died of a heart attack.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X