»   »  போலிச் சாமியார்களே... குர்மீத் சிங்குக்கு கம்பெனி கொடுங்க! - பாடகி விளாசல்

போலிச் சாமியார்களே... குர்மீத் சிங்குக்கு கம்பெனி கொடுங்க! - பாடகி விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடியவர் சின்மயி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் பஞ்சாப் மாநில சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை, பாலியல் குற்றத்திற்காக உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தது. இதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

Famous Singer's tweet about Gurmeet singh

இதற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து பாடகி சின்மயி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Famous Singer's tweet about Gurmeet singh

'குர்மீத் சிங் சாமியார் 20 வருடம் ஜெயிலில் இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது. இதுபோல போலிச் சாமியார்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களும் இவருக்கு கம்பெனி கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

'பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இந்தமாதிரி வன்முறைச் சாமியார்களைக் கடக்கிறார்கள். இந்த மதத் தொழிலதிபர்களிடம் இருந்து கவனமாக இருப்பதை எப்போது நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் சின்மயி.

Read more about: chinmayi சின்மயி
English summary
Singer chinmayi tweets about 'Godmen' Gurmeet singh who is given 20 years imprisonment in sexual assault case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil