»   »  பிரபல தியேட்டரில் ரிலீஸ் ஆகாத 'தானா சேர்ந்த கூட்டம்'... புதிய அறிவிப்பு

பிரபல தியேட்டரில் ரிலீஸ் ஆகாத 'தானா சேர்ந்த கூட்டம்'... புதிய அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
தானா சேர்ந்த கூடம் படத்திற்கு வந்த சூர்யா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் ரிலீஸாக இன்று வெளியாகி இருக்கிறது.

பல திரையரங்குகளிலும் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை சூர்யா ரசிகர்கள் இன்று காலை முதல் பார்த்து வருகின்றனர்.

பிரபல திரையரங்கமான ரோஹினி சில்வர் ஸ்கிரீன்ஸில் 'தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகவில்லை.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கார்த்திக் மற்றும் பலர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு சூர்யா ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள்

ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்காக சூர்யா கடந்த சில வாரங்களாக ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். ரசிகர்கள் மத்தியில் டான்ஸ் ஆடி மகிழ்வித்தார். 'TSK' படக்குழுவினர் பல இடங்களில் ப்ரொமோஷன் நிகழ்வுகளை நடத்தினர்.

ரிலீஸ் ஆகவில்லை

ரிலீஸ் ஆகவில்லை

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் இன்று வெளியாகவில்லை. விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் நிர்வாகம் இடையே கடைசி நிமிடம் வரை நீடித்த மோதல் காரணமாக TSK இந்த திரையரங்கில் வெளியாகவில்லை.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரோஹினி தியேட்டரில் 'தானா சேர்ந்த கூட்டம்' வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கடைசி நிமிடம் வரை விநியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால் படம் திரையிடப்படவில்லை என ரோஹினி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் சரண் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரையிட தயார்

திரையிட தயார்

"இப்போ இல்லைன்னா, சில நாட்கள் கழிச்சு திரையிடுவீங்களா..." என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, "இப்போ கூட அந்தப் பக்கம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைச்சா திரையிட தயார்தான்" என பதில் அளித்துள்ளார் ரேவந்த் சரண்.

மீண்டும் உற்சாகம்

ஒருவழியாக பிரச்னை தீர்ந்து, ரோஹினி திரையரங்கில் இன்று மாலை காட்சிக்கு டிக்கெட் புக்கிங் தொடங்கியிருக்கிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

English summary
Suriya starring TSK has been released today. 'Thaana serndha Koottam' is not released in the 'Rohini Silver screens' theater. The fans are disappointed that the film did not screen in Rohini theater. Now, Ticket booking was opened for evening show in this theater.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X