வேட்டிய மடிச்சு கட்டி காளையுடன் மல்லுக்கட்டும் சூர்யா...மோத தயாரான வில்லன் நடிகர்

சென்னை : டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் பிரபல வில்லன் நடிகரும் இணைந்துள்ளதை லேட்டஸ்டாக வெளியான BTS போட்டோக்கள் காட்டி கொடுத்து விட்டன. வாடிவாசல் களை கட்டுவதை ரசிகர்கள் உற்சாகமாக ரசித்து வருகின்றனர்.

நாவல்களை சினிமாவாக இயக்கி, தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்று வருபவர் டைரக்டர் வெற்றிமாறன். அந்த வரிசையில் விசாரணை, அசுரன், விடுதலை படங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட வாடிவாசல் நாவலை அதே பெயரில் சினிமாவாக இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் டைரக்டர் வெற்றி மாறன்.

வாடிவாசல் டெஸ்ட் ஷுட்

வாடிவாசல் டெஸ்ட் ஷுட்

நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் ஷுட்டிங் ஜுலை மாதம் துவங்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கான டெஸ்ட் ஷுட் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை ஈசிஆரில் துவங்கியது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, அதிலிருந்து 12 காளைகளை தேர்வு செய்து இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க வைக்க போகிறார்களாம்.

 சூரியும் நடிக்கிறாரா

சூரியும் நடிக்கிறாரா

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க போகிறார். நடிகர் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்ற போகிறார் என ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஆனால் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த டெஸ்ட் ஷுட் போட்டோக்களை சூரியும் பகிர்ந்து, இந்த படத்திற்காக காத்திருக்கிறேன் என கூறி உள்ளதால் அவரும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லன் நடிகர் ஒருவரும் இணைந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

காளைகளை அடக்கும் சூர்யா

காளைகளை அடக்கும் சூர்யா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்பட்டி கிராமவாசிகளின் மாசி சிவராத்திரி களரி திருவிழா செட் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் சூர்யா வேட்டியை மடித்து கடித்து, காளைகளை அடக்குவது போன்ற காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் BTS போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வாடிவாசலில் ஜெய்பீம் வில்லன்

வாடிவாசலில் ஜெய்பீம் வில்லன்

இதில் டாணாக்காரன் பட டைரக்டரும், ஜெய்பீம் படத்தில் வில்லன் ரோலில் நடித்தவருமான டைரக்டர் தமிழரசன் உள்ளார். இந்த போட்டோக்களை அவரும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அண்ணன் வெற்றிமாறனின் வாடிவாசல் பணிகள் தொடங்கியது. களத்தில் தம்பிகள் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார். இவரும் மாடு பிடிப்பது போன்ற போட்டோ ஒன்றும் வெளியாகி உள்ளது. வாடிவாசல் படத்தில் இவர் முக்கிய கேரக்டரில் நடிப்பதுடன் இயக்குனர்கள் டீமிலும் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X