»   »  நேற்று ரிலீஸான படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்

நேற்று ரிலீஸான படத்தின் முதல் டிக்கெட்டை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படமான கவுதமிபுத்ரா சதகர்னி பட டிக்கெட்டை ரசிகர் ஒருவர் ரூ.1 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படம் கவுதமிபுத்ரா சதகர்னி. படம் நேற்று வெளியானது. படத்தின் சிறப்பு காட்சிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Fan buys Balakrishna's 100th movie ticket for Rs. 1 lakh

இந்நிலையில் படத்தின் முதல் டிக்கெட்டை ஒருவர் ரூ.1 லட்சத்து 100 கொடுத்து வாங்கியுள்ளார். இன்னமுரி கோபிசந்த் என்னும் அவர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர் ஆவார்.

தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் செலவு செய்வது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புதிது அல்ல.

Fan buys Balakrishna's 100th movie ticket for Rs. 1 lakh

சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளுக்கு கிடைக்கும் பணம் பாலகிருஷ்ணாவின் தாயின் பெயரில் உள்ள பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனைக்கு அளிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு நிறுவப்பட்ட பசவதாரகம் புற்றுநோய் மருத்துவனையை முன்னாள் ஆந்திரா முதல்வரும், பாலகிருஷ்ணாவின் தந்தையுமான என்.டி. ராமா ராவ் திறிந்து வைத்தார்.

English summary
Balakrishna's 100th movie Gautamiputra Satakarni's first ticket has been bought by a die-hard fan for Rs. 100100.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil