»   »  செல்ஃபி கேட்ட சிறுவனின் செல்போனை பறித்து உடைத்த நடிகை

செல்ஃபி கேட்ட சிறுவனின் செல்போனை பறித்து உடைத்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
ட்விட்டரை விட்டு ஓடிய நடிகை!

ஹைதராபாத்: நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அனுசுயா தார்னாகா பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தாயின் வீட்டில் இருந்து வெளியே வந்த அனுசுயாவை சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார்.

செல்போன்

செல்போன்

அனுசுயாவை பார்த்த சிறுவன் தனது தாயிடம் இருந்த செல்போனை வாங்கிக் கொண்டு சென்று நான் உங்கள் ரசிகன் ஒரு செல்ஃபி எடுக்கலாமா என்று கேட்டுள்ளார்.

கோபம்

கோபம்

சிறுவன் என்று கூட பார்க்காமல் அனுசுயா அவர் கையில் இருந்த செல்போனை பறித்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளார். இதில் செல்போன் சேதம் அடைந்துள்ளது.

புகார்

புகார்

சிறுவனின் தாய் நேராக தார்னாகா காவல் நிலையத்திற்கு சென்று அனுசுயா மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலாய்

சிறுவனிடம் போய் இப்படியா நடந்து கொள்வது என்று நெட்டிசன்கள் அனுசுயாவை விளாசித் தள்ளி வருகிறார்கள். இதை பார்த்த அவர் தனது சமூக வலைதள கணக்குகளை டீஆக்டிவேட் செய்துள்ளார்.

English summary
A woman has given complaint against actress cum TV host Anasuya Bharadwaj for breaking her cellphone. Anasuya allegedly grabbed the cellphone from a kid who wanted to take a selfie with her and thrown it on the road.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil