»   »  ஹலோ சொல்லிட்டு அப்புறம் சாமி கும்பிடுங்க: கோவிலில் நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்

ஹலோ சொல்லிட்டு அப்புறம் சாமி கும்பிடுங்க: கோவிலில் நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை கோவிலில் சாமி கும்பிட்டபோது ரசிகர் ஒருவர் நடிகை வித்யா பாலனிடம் எல்லை மீறி நடந்துள்ளார்.

வித்யா பாலன் பேகம் ஜான் என்ற படத்தில் விபச்சார தொழில் நடத்தும் மேடமாக நடித்துள்ளார். படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோவில்

கோவில்

கோவிலில் வித்யா பாலன் கண்ணை மூடி பிரார்த்தனை செய்துள்ளார். அப்போது யாரோ தனது தோளை தட்ட கண் திறந்து பார்த்தால் ஒரு ஆண் நின்றுள்ளார்.

ஹலோ

ஹலோ

இது என் மனைவி அவருக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள் என்று அந்த நபர் வித்யாவிடம் கூறியுள்ளார். வித்யாவோ கொஞ்சம் பொறுங்கள் சாமி கும்பிட்டு முடித்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும்

மீண்டும்

வித்யா கண்ணை மூடி சாமி கும்பிட அந்த நபர் மீண்டும் அவரது தோளில் தட்டி முதலில் என் மனைவிக்கு ஹலோ சொல்லிவிட்டு அதன் பிறகு சாமி கும்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.

கோபம்

கோபம்

என்னை தொடுவது சரியில்லை. உங்களையோ, உங்கள் மனைவியையோ யாரோ முன்பின் தெரியாத நபர் தொட்டால் நீங்கள் சும்மா இருப்பீர்களா என்று வித்யா அந்த நபரிடம் கேட்டுள்ளார்.

கொல்கத்தா

கொல்கத்தா

முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் வித்யா மீது கையை போட்டுள்ளார். தற்போது கோவிலில் ஒருவர் அத்துமீறியுள்ளார்.

English summary
After the unfortunate incident at Kolkata airport, Begum Jaan actress Vidya Balan reveals yet another disgusting situation. What comes as a shocker is the fact that it happened in temple, a place which is supposed to be sacred!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil