»   »  வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்த ரசிகருக்கு ராய் லட்சுமியின் ரிப்ளை!

வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்த ரசிகருக்கு ராய் லட்சுமியின் ரிப்ளை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை ராய் லட்சுமி ட்விட்டரில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றுவார். அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவிப்பார்கள்.

ராய் லட்சுமி சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் இந்தியிலும் அறிமுகமான ராய் லட்சுமி நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தவிக்கிறார்.

இந்நிலையில், ட்விட்டரில் அவரது ரசிகர் ஒருவர் லட்சுமி ராயை திருமணம் செய்துகொள்வதாக வித்தியாசமான முறையில் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

நடிகை ராய் லட்சுமி சினிமா உலகிற்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் அவர் பெயர் சொல்லும்படியாக படங்கள் எதுவும் வரவில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், 'ஜூலி 2' மூலம் இந்தியிலும் அறிமுகமானார்.

ப்ரொபோசல்

ப்ரொபோசல்

தமிழில் 'மங்காத்தா', 'காஞ்சனா' போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் அவர் முன்னனி நடிகையாக மாறமுடியவில்லை. 28 வயதாகும் ராய் லட்சுமிக்கு அவரது ட்விட்டரை பின்பற்றும் ரசிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

காதல்

ரெட்டி சாப் என்பவர், "ராய் லட்சுமி என்னை திருமணம் செய்துகொள்கிறீர்களா? என்னிடம் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஒரு அழகிய தோட்டத்துடன் கூடிய வீடு உள்ளது. ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அதோடு என் மனதில் உங்கள் மீது நிறைய காதல் இருக்கிறது. தயவு செய்து எனக்கு பதிலளிக்கவும்.." என ட்வீட் செய்துள்ளார்.

ராய் லட்சுமி பதில்

இதைப் பார்த்த ராய் லெட்சுமி, "ஹாஹா... நீங்கள் காதலைத் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி. தற்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. உங்களுக்கு ஒரு அழகிய மனைவி கிடைக்க வாழ்த்துக்கள்." என பதிலளித்துள்ளார்.

English summary
Fan proposed raai laxmi on twitter. Raai laxmi replied to his proposal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X