»   »  வெளியே போ: ரஜினியை கலாய்த்த ரசிகரை விரட்டிய கமல்

வெளியே போ: ரஜினியை கலாய்த்த ரசிகரை விரட்டிய கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியை கலாய்த்த ரசிகரை விரட்டிய கமல்- வீடியோ

சென்னை: ரஜினியை கலாய்க்க முயன்ற ரசிகரை விரட்டிவிட்டுள்ளார் கமல் ஹாஸன்.

ரஜினிகாந்தை சோலோ ஹீரோவாக நடிக்குமாறு ஐடியா கொடுத்தவர் உலக நாயகன் கமல் ஹாஸன். ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக் கொண்டாலும் அவர்கள் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

தற்போது இருவரும் அரசியலுக்கு வந்துள்ளனர்.

கலாய்

கலாய்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து மக்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

ரசிகர்

ரசிகர்

கமல் தனது ரசிகர்களை சந்தித்தபோது ஒருவர் ரஜினியை கலாய்க்க துவங்கினாராம். அதை பார்த்த கமல் கோபம் அடைந்து அவரை வெளியே போகுமாறு தெரிவித்தாராம்.

ஆண்டவர்

ஆண்டவர்

என் நண்பன் ரஜினிகாந்தை யாரும் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. இது என் உத்தரவு என்று தனது ரசிகர்கள், ஆதரவாளர்களிடம் கறாராக கூறிவிட்டாராம் உலக நாயகன்.

கூடாது

கூடாது

ரஜினி மட்டும் அல்ல எந்த கட்சியையும் கேலி செய்யக் கூடாது என்று கமல் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம். கமல் அடுத்த மாதம் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Haasan has reportedly asked one of his supporters to leave the premise after he tried to troll superstar Rajinikanth. Kamal has asked his supporters not to troll either Rajini or any parties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil