என்னய்யா இப்படியாகிபோச்சு.. ‘கோப்ரா‘வை பிளாப் லிஸ்டில் சேர்த்த ரசிகர்கள்!
சென்னை : சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியான கோப்ரா படத்தை நெட்டிசன்ஸ் அதற்குள் பிளாப் லிஸ்டில் சேர்த்துள்ளனர்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கோப்ரா
'டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்' என அடுத்தடுத்து இரண்டு வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படம் கோப்ரா. ஏஆர் ரகுமானின் இசை, விக்ரம் விதவிதமான கெட்டப் என இந்தப் படம் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடர் கொலை
கோப்ரா படத்தின் தொடங்கம் மிகவும் ஆரவாரமாக இருந்தது. ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரைக் கொல்ல ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் என்ட்ரி கொடுக்கிறார் படத்தின் நாயகன் விக்ரம். அந்தக் கொலை எப்படி நடந்தது என்பதை இன்டர்போல் போலீஸ் அதிகாரியான வரும் இர்பான் பதான் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த விசாரணையில் விக்ரம் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவருகிறது.

ஒரே குழப்பம்
டீசர், டிரைலர் இரண்டையும் பார்த்த பிறகு ஏதோ புதிதாக சொல்லப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். அந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து முழுமையாக பூர்த்தி செய்யவில்லை படம் தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கு குழப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோப்ரா
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு கோப்ரா படம் திரையரங்கில் வெளியாகி உள்ளதால், இந்தபடத்தை காணமிகவும் ஆர்வமாக இருந்தனர்.ஆனால்,காலை 5மணிக்கு சிறப்பு காட்சிப் பார்த்த ரசிகர்கள் பலர் நெகடிவ் கருத்துக்களை தெரிவித்தால் விக்ரம் ரசிகர்களை அப்செட்டாகினர். இதனால் கடுப்பான நெட்டிசன்ஸ் கோப்ரா படத்தை விக்ரமின் தோல்வி படங்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டனர்.

விக்ரம்
சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியான 'ஐ' திரைப்படத்திற்கு பிறகு வெளியான 10 எண்றதுக்குள்ள, இரு முகன், ஸ்கெட், சாமி 2, கடாரம் கொண்டான், மஹான் போன்ற படங்கள் தோல்வி அடைந்தது போல கோப்ரா படத்தையும் பிளாப் லிஸ்டில் சேர்த்துள்ளனர்.அடுத்து பொன்னியின் செல்வன் ? என்னவாகுமோ என்பது போல கேள்விக்குறியுடன் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுக்கு ஏராளமானோர் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications