தந்தையர் தினம் வாழ்த்து பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி...அட்வைஸ் கொடுத்த ரசிகர்கள்
சென்னை : தந்தையர் தினத்தை முன்னிட்டு க்யூட்டான போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் வித்தியாசமான அட்வைஸ் ஒன்றை வழங்கி உள்ளனர்.
ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது கணவர் தனுஷை பிரிவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். அதற்கு பிறகு அவர்களின் பிரிவு பற்றி பல வதந்திகள், கிசுகிசுக்கள் பரவின.
இருப்பினும் அதை கண்டு கொள்ளாமல் தனது வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மீண்டும் டைரக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். பயணி வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பு, ஐஸ்வர்யா ரஜினிக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது.

டைரக்ஷனில் பிஸி
தொடர்ந்து பாலிவுட், கோலிவுட் என ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கான வேலைகளை செய்து வருகிறார். கதை டிஸ்கஷனில் தீவிரம் காட்டி வருகிறார். வேலைகளில் மட்டுமல்ல தொடர்ந்து சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சோஷியல் மீடியாவிலும் பிஸி
சோஷியல் மீடியாவில் தான் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளிங் போவது போன்றவற்றின் போட்டோக்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.

டப்பிங் பேசும் ஐஸ்வர்யா
டைரக்ஷனுடன் சேர்த்து பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாக்களின் டப்பிங் பேசும் வேலைகளையும் ஐஸ்வர்யா துவங்கி உள்ளார். சமீபத்தில் இதன் போட்டோக்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து விட்டு ஐஸ்வர்யாவின் தைரியத்தை பாராட்டி பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

ஐஸ்வர்யாவின் தந்தையர் தின வாழ்த்து
இந்நிலையில் இன்று சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் க்யூட்டான போட்டோ ஒன்றை பகிர்ந்து, My heratbeat...happy father's day என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரஜினியின் ஸ்மைல் சூப்பர், போட்டோ சூப்பர் என பலரும் பாராட்டி கமெண்ட் போட்டிருந்தனர்.

பதிலுக்கு ரசிகர்கள் அட்வைஸ்
அதே சமயம் ஒரு சில ரசிகர்கள், heart beat, hurt ஆகாத மாதிரி நடந்துக்கோங்க என அட்வைஸ் வழங்கி உள்ளனர். இன்னும் சிலர், உங்களின் மகன்களுக்கும் இதயம் உண்டு. இதய துடிப்பு உண்டு. அதனால் உங்கள் மகன்களிடமும் சொல்லி தனுஷ் சாருக்கு தந்தையர் தின வாழ்த்து சொல்ல சொல்லுங்க என அட்வைஸ் செய்துள்ளனர்.

இதை செய்யுங்க போதும்
குழந்தைகளாக பெற்றவர்களின் மனதிற்கு அமைதியை தர வேண்டும். அது தான் தந்தையர் தினத்திற்கு உண்மையான பரிசாக இருக்க முடியும். வாழ்த்து சொல்வது இருக்கட்டும். உங்க அப்பாவின் அட்வைஸ் படி முதலில் கேட்டு நடங்க. தலைவரை சந்தோஷமா பார்த்துக்கங்க என பல விதமாக அட்வைஸ் வழங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











