Loki Trolls: எடுத்தாலும் நடிச்சாலும் இதை விட்டா ஒன்னும் தெரியாது போல.. லோகியின் DCலுக்கை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கூலி. ரஜினி, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வி படமாக மாறியது. வசூல் ரீதியாக பெரிய வெற்றியை எட்டாத படம் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி இந்த படத்தின் புரமோஷன் வீடியோ படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டது. இது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் மீது பொதுவாகவே இருக்கும் விமர்சனம் என்றால் அது, ரத்தம், வெட்டு, குத்து, போதைப்பொருளை மையமாகக் கொண்டுதான் படங்கள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொள்கிறது என்றால், அந்த தயாரிப்பு நிறுவனம் அதிகம் செலவிடும் செலவினம் என்றால் அது சினிமாவுக்கான ரத்தத்தை பேரல் பேரலாக வாங்க வேண்டும் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

டிசி பட புரோமோ: இப்படி இருக்கையில், அவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் DC படத்தின் அறிவிப்பு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் லோகேஷ் கனராஜ் உடல் முழுக்க ரத்தத்துடன் ஒரு சிகரெட் புகைத்து கொண்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்களும் இணையவாசிகளும், "லோகேஷ் கனகராஜ்க்கு எடுத்தாலும் நடிச்சாலும் இதை விட்டா ஒன்னும் தெரியாது போல" என்று கலாய்த்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
டிரோல்கள்: மேலும் சிலர், லோகேஷ் கனகராஜ் என்ன ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் காட்டுவாசி போல இருக்கிறார், வன்முறை,போதை, ரீமிக்ஸ் பாடல்கள்..இவற்றைத் தவிர லோகேஷ் கனகராஜ்க்கு படம் எடுக்க வேறு கதைகளே இல்லை போல என்றும், ரத்தம், போதை, துப்பாக்கி... அவ்ளோதான்" என்றும் பதிவிட்டு வருகிறார்கள். பரவலாகவே DC படத்தின் புரோமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது. டிசி படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக கைதி 2 படம் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











