twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ், சமுத்திரகனி, அமீர் போன்ற நடிகர்களை வீணடித்த ’மாறன்’ பட இயக்குனர்... கோபப்படும் ரசிகர்கள்

    |

    சென்னை: மணவாழ்க்கை முறிவுக்குப்பின் தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் 'மாறன்'. பெருத்த எதிர்பார்ப்புடன் வந்த இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளதாக தனுஷ் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். வட சென்னை படத்தில் நடித்த தனுஷ், சமுத்திரகனி, அமீர் போன்றவர்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    ரூ. 100 கோடி வசூலை எட்டிய கங்குபாய் கத்தியாவாடி... ஆலியா செஞ்ச வேலைய பாருங்க! ரூ. 100 கோடி வசூலை எட்டிய கங்குபாய் கத்தியாவாடி... ஆலியா செஞ்ச வேலைய பாருங்க!

    நடைமுறைக்கு சம்பந்தமில்லாத காட்சிகள்

    நடைமுறைக்கு சம்பந்தமில்லாத காட்சிகள்

    நடைமுறைக்கும் சினிமா காட்சிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது ஆண்டாண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு உண்மை. எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே திருடனை போலீஸ் தேடும் பொழுது, அவர் ரெயின் கோட்டும், தொப்பியும் போட்டுக்கொண்டு போலீஸ் எதிரில் தலைமறைவாக சுற்றுவதாக காண்பிப்பார்கள். ரெயின்கோட்டை போட்டுக்கொண்டு வித்தியாசமாக சுற்றும் அவரை போலீஸ் சந்தேப்பட்டு எளிதாக அடையாளம் காண முடியும் ஆனாலும் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்று நம்மை நம்ப வைப்பார்கள். சில நேரம் சாதாரண மீசை, தாடி வைத்துக்கொண்டு பெற்ற அம்மா, மனைவிக்கு அடையாளம் தெரியாத வகையில் கதாபாத்திரம் உலவுவதாக வைத்த காலங்கள் உண்டு.

    கிண்டலடிக்கும் காவல் அதிகாரிகள்

    கிண்டலடிக்கும் காவல் அதிகாரிகள்

    இதை கிண்டலடித்து வந்த படங்களும் உண்டு. ஆனாலும் இப்போது வரை இந்த பார்முலாக்கள் அதிகமாக இல்லை என்றாலும் இல்லாமல் இல்லை எனலாம். இதேபோன்று காவல் துறை சம்பந்தமாக திரைப்படங்களில் வரும் அபத்தமான காட்சிகள் காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும், அது குறித்த விவரம் அறிந்தவர்கள் மத்தியிலும், திரைத்துறையிலேயே விவரமறிந்தவர்கள் மத்தியிலும் கிண்டலடிக்கப்படுவது உண்டு.

    போலீஸ் பற்றிய புரிதல் இல்லா காட்சிகள்

    போலீஸ் பற்றிய புரிதல் இல்லா காட்சிகள்

    உயரதிகாரியின் உடையைப் போட்டுக் கொண்டு நிற்கும் நபரை அவருக்கு கீழே பணியாற்றும் அதிகாரியின் சீருடையணிந்த அதிகாரி மிரட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். டிஜிபி நடத்தும் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் சாதாரணமாக தெருவில் நிற்கும் கான்ஸ்டபிள் கலந்து கொள்வது போல் காட்சிகள் அமைக்கப்படும், இவை எல்லாம் எந்த ஊரில் நடக்கிறது என்று காவல்துறை அதிகாரிகளே கேலியாய் சிரிப்பதை பார்க்கிறோம்.

    விமர்சிக்கப்படும் மாறன்

    விமர்சிக்கப்படும் மாறன்

    ஆனால் சில இயக்குனர்கள் இதுபோன்ற விஷயங்களில் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களின் ஆலோசனையுடன் மிகச்சிறப்பாக ஹோம் ஒர்க் செய்து சிறு காட்சியிலும் பிழைகள் இல்லாமல் சரியாக படம் எடுப்பதை பார்க்கிறோம். அதிலும் சினிமாவுக்காக சில அட்ஜஸ்ட்மென்ட் இருந்தாலும் எல்லாவற்றையும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதாக பலரும் கடந்து செல்வார்கள். ஆனால் அபத்தத்தையே படமாக எடுக்கும் இயக்குனர்கள் உள்ளனர். இதில் சமீபமாக வெளிவந்த மாறன் படத்தை சேர்த்து வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    வீணடிக்கப்பட்ட விருதுபெற்ற நடிகர் தனுஷ்

    வீணடிக்கப்பட்ட விருதுபெற்ற நடிகர் தனுஷ்

    தேசிய விருது வாங்கிய நடிகர், மிக அனாவசியமாக முகபாவனைகள், உடல் அசைவுகள் மூலம் தன்னுடைய கதாபாத்திரத்தை பதிய வைத்து விட்டு செல்லும் நடிகர். பொல்லாதவன், புதுப்பேட்டை, வடசென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மற்ற நடிகர்களின் ரசிகர்களும் குறை சொல்ல முடியாத நடிப்புக்கு சொந்தக்காரர் தனுஷ். சமுத்திரகனி இயக்குனராக இருப்பவர், நடிப்பிலும் முத்திரை பதித்தவர். தன்னுடைய கதாபாத்திரத்தில் எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் வலுவாக நடிக்க கூடியவர். அமீரும் அவ்வாறு மிக இயல்பாக நடிக்க கூடிய ஒருவர். இவர்கள் அனைவரும் வீணடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

    ஜாம்பவான் நடிகர்களுக்கும் பயன்படுத்தப்படவில்லை

    ஜாம்பவான் நடிகர்களுக்கும் பயன்படுத்தப்படவில்லை

    இவர்களைப் போன்று படத்தில் பல முக்கியமான நடிகர்கள் பல படங்களில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திய நடிகர்கள் இந்தப்படத்தில் அவர்கள் விளையாட்டு பொம்மைகள் போல் வீண் அளிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. வலுவில்லாத கதை அமைப்பு, காட்சி அமைப்பு காரணமாக படம் மெதுவாக நகர்வதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். படத்தின் கதையில் தேவையில்லாமல் கதாநாயகன் கஷ்டப்படுவதாக காட்ட சில குடும்ப காட்சிகளை வைத்து முன் கதை இழுவையாக நகர்கிறது. அப்பா கொல்லப்பட அம்மா பிரசவத்தில் உயிரிழப்பது, ஹீரோ அனாதையாவது எத்தனை பழமையான டெக்னிக் கிண்டலடிக்கிறார்கள்.

    முரண் காட்சிகள்

    முரண் காட்சிகள்

    அப்பா நேர்மையான எழுத்தாளர் அவர் எழுதியது அச்சுக்கு போய் பேப்பர் விற்பனை ஆவதற்கு முன்னரே எப்படி ஆதாரம் கேட்டு கொல்கிறார்கள்? அம்மா பிரசவத்தில் இறந்து விடுகிறார், கைக் குழந்தையாக தங்கையை கையில் வாங்கும் சிறுவன் தனுஷ் குழந்தையை தானே வளர்க்கிறார். ஆனால் அந்தக்காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. இதெல்லாம் எந்த காலத்தில் எடுக்கப்பட்ட திரைக்கதை அமைப்பு ஒரு காலத்தில் இது போன்ற கதைகளை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் இப்போதெல்லாம் இது எடுபடுமா? இப்படி கதையமைப்பை வைத்துவிட்டு ஹீரோவை பார்க்கவரும் ஹீரோயின் ஷாம்பெயின் பாட்டில் வாங்கி வருவதாக காட்சியையும் வைத்துள்ளார் இயக்குநர்.

    சலிப்படையும் ரசிகர்கள்

    சலிப்படையும் ரசிகர்கள்

    யதார்த்தமான விஷயங்களை விரும்பும் ரசிகர்கள் இவைகளைப் பார்த்து சலிப்படைந்ததுதான் மிச்சம். மற்றொருபுறம் காட்சி அமைப்புகள் கேலி பொருளாக மாறிவிட்டது சினிமாவில் பத்திரிக்கை அலுவலகம், பத்திரிக்கையாளர் என்று வந்தாலே அது கேலிக்குரிய பொருளாக தான் இருக்கும் என்கிற விதி மாறன் படத்திலும் நிருபிக்கப்பட்டுள்ளது. யதார்த்தத்திற்கும் நடைமுறைக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களை தான் பத்திரிகை அலுவலகத்தில் நடப்பதாக இயக்குனர்கள் காட்சிகளை வைக்கிறார்கள். இவர்கள் படம் எடுப்பதற்கு முன் ஒரு தடவை பத்திரிகையாளர்களையும் அல்லது பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று வந்தால் தெரியும்.

    பத்திரிகை அலுவலகம் இப்படித்தான் இருக்குமா?

    பத்திரிகை அலுவலகம் இப்படித்தான் இருக்குமா?

    பத்திரிக்கை அலுவலகத்துக்கு இண்டர்வியூ போகும் தனுஷ் இன்டர்வியூவில் கேட்கப்படும் கேள்வியை வைத்து இன்றைய ஊடகங்களை சாடுவதாக காட்சி வைத்துள்ள இயக்குநர் அடுத்த காட்சியில் தனுஷை சோதிக்க அவர் சொல்லும் தலைப்பை ட்விட்டரில் போடச்சொல்கிறார். அது உடனே 10 ஆயிரம் லைக் போகிறதாம். எந்த ஊரில் இதெல்லாம் நடக்கிறது தெரியவில்லை. ஹீரோயின் வழக்கம்போல் பத்திரிக்கை அலுவலகத்தில் செய்தியாளராக இருக்கிறார். ஹீரோ வேலைக்கு சேர்ந்தவுடன் அவர் வழக்கம்போல் ஹீரோவுடன் பைக்கில் சுற்றுகிறார். நடுவில் காணாமல் போய்விடுகிறார்.

    வீணடிக்கப்பட்ட கதாநாயகி பாத்திரம்

    வீணடிக்கப்பட்ட கதாநாயகி பாத்திரம்

    பெண் பத்திரிக்கையாளர் என்பதால் ஜீன்ஸ், ஷர்ட் கூலிங் கிளாஸ், ஷாம்பெய்ன் எல்லாம் குடிக்கிறார். இடையிடையே சுவிங்கம் சாப்பிட்டு ஹாலிவுட் ஸ்டைலில் தனுஷை கூர்ந்து பார்க்கிறார். தனுஷ் எழுதுகிறார், அந்தப்பத்திரிக்கை அலுவலகத்தில் மற்றவர்கள் தனுஷை பாராட்டுவது சரி, ஊரில் உள்ள சானல்கள் எல்லாம் தனுஷ் படத்தை போட்டு பாராட்டுகிறார்கள் என்பது செம காமெடி. செட் பிராபர்ட்டியுமாக வந்து போகிறார்கள். சாதாரணமாக தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் பணத்தை கைப்பற்றுவதி தனுஷ் எழுதுவதால் பிடித்ததாக அவர் பெயரைப்போட்டு செய்தி வருகிறது. எந்த ஊரில், எந்த பத்திரிக்கையில் இப்படி எழுதுகிறார்கள் தெரியவில்லை.

    பத்திரிக்கையாளர் ஹேக்கராக மாறும் விந்தை

    பத்திரிக்கையாளர் ஹேக்கராக மாறும் விந்தை

    திடீரென ஹேக்கராக மாறி, நட்சத்திர ஹோட்டலில் புகுந்து சப்ளையராக மாறி போலி இவிஎம் மிஷின் பற்றி கண்டுபிடிக்கிறார். கூடவே ஹிரோயின் மாளவிகா உட்கார்ந்து பரோட்டோ சூரி பரோட்டோ சாப்பிடும்போது குருமா ஊற்றும் அப்புக்குட்டி போல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். திடீர் திடீரென மாறும் காட்சிகள், சம்பந்தமில்லாமல் எகிறும் கதையமைப்பு ஊரில் என்ன பிரச்சினை நடந்தாலும் ஒரே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மட்டுமே விசாரிப்பார், அவருடன் ஒரு எஸ்.ஐ., 4 போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆங்கிலத்திலேயே பேசி சந்தேகப்படுவார் என்பது எப்போது மாறப்போகிறதோ.

    லாஜிக்கை மறந்த சமாச்சாரங்கள்

    லாஜிக்கை மறந்த சமாச்சாரங்கள்

    கதைக்குள் சென்றால் அந்தகாலத்து பைசா பெறாத கதையை எடுத்துள்ளார். அப்பாவைக் கொன்றவர்களை ஹீரோ பழி வாங்குவார் என்று பார்த்தால், அதைப்பற்றி யோசிக்காமல் பாரில் குடித்துவிட்டு கிடக்கிறார், தங்கை கொல்லப்பட்டப்பின் பழிவாங்க ஆவேசத்துடன் செல்கிறார், ஆனால் தங்கை கொல்லப்படவில்லை என்று தனக்கு ஆரம்பத்திலேயே தெரியும் என்கிறார். போலீஸ் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பார்த்து தெரிந்துக்கொண்டேன் என்கிறார். எந்த ஊரில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வீடு தேடி வந்து தருகிறார்கள் தெரியவில்லை.

    துருவங்கள் 16 இயக்குநரா இவர்?

    துருவங்கள் 16 இயக்குநரா இவர்?

    இப்படி அபத்தத்தின் மொத்தமாக எடுக்கப்பட்ட படத்தில் திரைக்கதை, காட்சி அமைப்புகள் வலுவில்லாமல் காமெடியாக உள்ளதால் தனியாக மருந்துக்கூட காமெடி காட்சிகள் வைக்கப்படவில்லை. தேசிய விருதுப்பெற்ற தனுஷ் எனும் ஒரு புகழ்ப்பெற்ற நடிகரை வீணடித்திருக்கிறார்கள், கூடவே சேர்ந்து சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்ட நடிகர்களும் வீணடிக்கப்பட்டுள்ளது வேதனையான ஒன்று. இயக்குநர் கார்த்திக் நரேன் துருவங்கள் 16 என்ற படத்தை கொடுத்தவரா? என்று யோசிக்க வைக்கிறது. மாறன் படத்தில் நடித்த தனுஷ் தன்னை நிருபிக்க மீண்டும் வெற்றிமாறன் படத்தில் நடித்து ரினியூவல் செய்தால்தான் உண்டு நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

    English summary
    Netizens sharing negative comments about maran movie and they surprised that whether dhruvangal pathinaaru director karthik naren directed the same movie maran ?, துருவங்கள் பதினாறு இயக்குனர் படமாக இது? என ரசிகர்கள் மாறன் திரைப்படம் குறித்து வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X