“இத.. இதைத் தான் எதிர்பார்த்தோம்”.. திட்டிய ரசிகர்களையே பாராட்ட வைத்த விஜய் பட நடிகை!

கேன்ஸ் விழாவிற்கு சேலையில் சென்ற கங்கணாவை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

சென்னை: கேன்ஸ் பட விழாவில் நடிகை கங்கணா ரணாவத் அணிந்து வந்திருந்த உடையால் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச அளவில் முக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கேன்ஸ் விருதுகள் வழங்கும் விழா பிரான்ஸ் ரகரில் நடைபெற்று வருகிறது. வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த விழாவில் ஹாலிவுட்டைப் போலவே பாலிவுட்டில் இருந்தும் பல முன்னணி நடிகர், நடிகையர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணாவத் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ரசிகர்கள்:

ரசிகர்கள்:

ஆண்டுதோறும் சிவப்பு கம்பள வரவேற்பில் இவர்கள் அணிந்து வரும் ஆடைகள் மக்கள் மத்தியில் பிரபலம். அவர்கள் என்ன உடை அணிந்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கவே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. தினமும் ஒரு வித ஆடை அணிந்து நடிகைகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

திட்டு வாங்கிய கங்கணா:

அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன் கேன்ஸ் விழாவுக்கு அணிந்து வந்த உடையால் கங்கணாவும், பிரியங்காவும் சர்ச்சையில் சிக்கினர். காரணம் அவர்களது ஆடை அவ்வளவு கவர்ச்சியாக இருந்தது. அத்தகைய உடை அங்கு பெரிய விசயமில்லை என்றாலும், இந்திய ரசிகர்கள் அவற்றை ரசிக்கவில்லை. இதனால் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கங்கணாவையும், பிரியங்காவையும் திட்டித் தீர்த்தனர்.

காஞ்சிபுரம் பட்டு:

காஞ்சிபுரம் பட்டு:

இந்நிலையில், திட்டிய ரசிகர்களையே பாராட்டும் படி மற்றொரு உடையணிந்து அசத்தியுள்ளார் கங்கணா. கேன்ஸ் விழாவில் ஒருநாள் அவர் காஞ்சிபுரம் பட்டுச் சேலை அணிந்து சென்றுள்ளார். அந்த சேலைக்கு ஜாக்கெட்டை மாடர்னாக அவர் அணிந்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு:

ரசிகர்கள் பாராட்டு:

சேலையில் கங்கணாவின் அழகை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். அதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இந்தியப் பெண்கள் இது போன்று சேலையில் செல்வது நமது நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்வதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவப்புக் கம்பளத்தில் இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தலைவியின் நாயகி:

கங்கணா தற்போது விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X