நிரூப் செய்ததை அவருக்கே திருப்பி செய்யும் அண்ணாச்சி...வேற லெவல் ப்ரோமோ
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பாதி வழியை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. எட்டு வாரங்கள் முடிந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிதாக அமீர் மற்றும் சஞ்சீவ் வந்துள்ளனர்.
கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் அவர் தொகுத்து வழங்கியதை ஏற்காத ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகிறார்கள். கமல் விரைவில் மீண்டும் வர வேண்டும் என கேட்டு வருகிறார்கள்.

தலைவர் போட்டியில் 3 பேர்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று ஒன்பதாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற போர்டிங் ஸ்கூல் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட இமான் அண்ணாச்சி, சிபி, அபிஷேக் ஆகியோர் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளதாக பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெறும் அண்ணாச்சி
நிகழ்ச்சியின் 57 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதன் முதல் ப்ரோமோவில் தலைவர் போட்டிக்கு தேர்வான மூன்று பேரும், கொடுக்கப்பட்ட க்யூப்களை அடிக்க வேண்டும். யார் தலைவராக விருப்பம் இல்லையோ அவரை உயரமாக அடிக்க முடியாத படி பந்துகளை எரிந்து, மற்ற ஹவுஸ்மெட்கள் தடுக்க வேண்டும். தான் தலைவர் ஆனதே இல்லை. அதனால் இந்த வாரம் தான் தலைவர் ஆக வேண்டும் என கேட்கிறார் அண்ணாச்சி. தொடர்ந்து எதிர்ப்புக்களை மீறி இமான் அண்ணாச்சி உயரமாக அடுக்குகிறார்.

தட்டி பறிக்கும் நிரூப்
அப்போது பிக்பாஸ் காயினை பயன்படுத்துகிறீர்களா என கேட்கிறார். அப்போது நிரூப், தனது காயின் பவரை பயன்படுத்தி வீட்டின் தலைவர் ஆவதாக கூறுகிறார். இதைக் கேட்டு ஷாக் ஆகும் அண்ணாச்சி, நீ பயந்து விட்டாய் தம்பி என்கிறார். இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

நிரூப்பை எதிர்க்கும் அண்ணாச்சி
இதில் இந்த வார தலைவராகும் நிரூப், ஹவுஸ்மேட்களுக்கு வேலையை பிரித்து கொடுக்கிறார். எல்லா வேலையையும் கொடுத்தால் செய்ய முடியாது என்கிறார் அண்ணாச்சி. ஆனால் நிரூப், தான் இந்த வீட்டின் தலைவர். தான் சொல்வதை கேட்டுத் தான் ஆக வேண்டும் என்கிறார். அதோடு தனது காயின் பவரை அபிஷேக்கிற்கு கொடுத்து பெட்ரூம் ஏரியாவை ஆளுமை செய்ய சொல்கிறார். இதற்கு வருண் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

செய்ய முடியாது
அண்ணாச்சி வேலை செய்ய முடியாது என சொல்வது பற்றி பிக்பாஸிடம் புகார் கூறுகிறார் நிரூப். இருந்தும் தன்னால் செய்ய முடியாது என்றால் செய்ய முடியாது தான். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்கிறார் அண்ணாச்சி தீர்க்கமாக. மற்றவர்கள் தலைவராக இருந்த போது அவர்கள் சொல்வதை செய்ய முடியாது என பிடிவாதமாக சண்டை போட்டார் நிரூப். இன்று அதையே நிரூப்பிற்கு அண்ணாச்சி திருப்பி செய்துள்ளார்.

அப்படி போடு
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு ரசிகர்கள், நிரூப்பிற்கு பயம் வந்துடுச்சு போல. பாவம் எல்லோரும் அவன வச்சு செய்றாங்க. நிரூப் மீது மற்றவர்களுக்கு பொறாமை. செம. நிரூப் மட்டும் என்ன சொன்னாலும் பண்ணமாட்டான். இப்போ மட்டும் பண்ணணுமா என கேட்டுள்ளனர். எதையும் கேட்க மாட்டேன் என சொல்வதற்கு அண்ணாச்சி வீட்டிலேயே இருந்திருக்கலாம். எதற்காக பிக்பாசிற்கு வரணும் என சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











