»   »  அப்போ ஜெஸ்ஸி, இப்போ ஹேமானிகா... கண்ணுக்குள்ளேயே நிக்குறீங்களே திரிஷா!

அப்போ ஜெஸ்ஸி, இப்போ ஹேமானிகா... கண்ணுக்குள்ளேயே நிக்குறீங்களே திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் அழகும், நடிப்பும் அபாரம் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

கௌதம்மேனனின் இயக்கத்தில் அஜீத் நாயகனாக நடித்துள்ள ‘என்னை அறிந்தால்' இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா என அஜீத்திற்கு இரண்டு நாயகிகள்.


திரிஷாவின் கதாபாத்திரப் பெயர் ஹேமானிகா. அனுஷ்காவின் பெயர் தேன்மொழி. இப்படத்தில் நடனக் கலைஞராக திரிஷா நடித்திருக்கிறார்.


முன்னதாக வெளியான இப்பட போஸ்டர்களிலேயே திரிஷாவின் அழகு அள்ளியது. இந்நிலையில், இன்று படத்தைப் பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.


கண்களில் மழை...

ராஜேஷ் என்ற ரசிகர், ‘ஹேமானிகா கதாபாத்திரம் அருமை... மழை வரப் போகுதே... இடைவேளையின் போது நான் அழுதே விட்டேன்...' எனத் தெரிவித்துள்ளார்.


ராணி... மகாராணி...

இதேபோல், மற்றொரு ரசிகர், ‘ஹேமானிகா அற்புதமான கதாபாத்திரம். இப்படத்தின் முடிசூடா ராணி' எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.


நேற்று... இன்று... நாளை...?

'நேற்று ஜெஸ்ஸி, இன்று ஹேமானிகா, நாளை... இதைப் போன்றே மேலும் பல நல்ல கதாபாத்திரங்களில் திரிஷா நடிக்க வேண்டும் எனப் பல ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அம்சமான ஜோடி...

விண்ணைத் தாண்டிய வருவாயாவிற்குப் பிறகு, இப்படத்தில் சத்தியதேவ் - ஹேமானிகா ஜோடி நெஞ்சத்திலேயே நிற்பதாகவும், திரிஷாவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


மழை வரப் போகுதே...

மழை வரப் போகுதே...

மேலும், ஹேமானிகா என்ற அற்புதமான கதாபாத்திரத்தை திரிஷாவிற்குக் கொடுத்த கௌதம்மேனனுக்கும் திரிஷா ரசிகர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மழை வரப் போகுதே பாடல் காட்சிகள் அருமையாக படமாக்கப் பட்டுள்ளதாக பாராட்டியுள்ளனர்.


English summary
The Fans of actress Trisha tweeted that she has performed well in Yennai arindhaal movie, which was released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil