மீண்டும் மாநாடு ரிலீஸ் ஒத்திவைப்பு...என்ன காரணம்னு சொல்லுங்க.... கொந்தளிக்கும் ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படமாக உள்ளது. இந்த படம் எப்போது ரிலீசாகும் என சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

கொரோனா, லாக்டவுன் என பல தடைகளை தாண்டி ஒரு வழியாக மாநாடு படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு துவக்கத்தில் முடிக்கப்பட்டது. நீண்ட நாட்களாக தாமதமாகி வந்ததால் மாநாடு படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூட தகவல் பரவியது. ஆனால் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்வோம் என்பதில் படக்குழு உறுதியாக இருந்தது.

பலமுறை தள்ளிவைப்பு

பலமுறை தள்ளிவைப்பு

மே 14 ம் தேதி ரம்ஜானுக்கே மாநாடு படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் தாமதமாவதாக கூறி, ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, ஆயுத பூஜை என பலமுறை எதிர்பார்க்கப்பட்டு, ரசிகர்கள் ஏமாந்து போயினர். இறுதியாக தீபாவளி நாளான நவம்பர் 4 ம் தேதி மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தீபாவளிக்கும் இல்லை

தீபாவளிக்கும் இல்லை

ஆனால் கடைசி நிமிடத்தில் பின்வாங்கி, ரிலீஸ் தேதியை நவம்பர் 25 ம் தேதிக்கு மாற்றினர். பிறகு அதுவும் இல்லை நவம்பர் 27 என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழம்பிப் போய் இருந்த நிலையில், எஸ்ஜே சூர்யா இன்று பதிவிட்ட ட்வீட்டில் தீபாவளி வாழ்த்து கூறி இருந்தார். அதோடு நாளை முதல் உலகம் முழுவதும் தியேட்டர்களில் தீபாவளி என்ற வாசகத்துடனான போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 25 மாநாடு ரிலீசாகும் என ரசிகர்கள் குஷியாகினர்.

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு

ஏற்கனவே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. மாநாடு ரிலீசை முன்னிட்டு சிலம்பரசன் என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கினர். இதற்கிடையில் மாநாடு ரிலீசாக போகும் சமயத்தில், கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டும் தான் தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி என அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ட்வீட் செய்ததுடன், முதல்வர் ஸ்டாலினுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடிதம் எழுதினார்.

மாநாடு ரிலீஸ் ஒத்திவைப்பு

மாநாடு ரிலீஸ் ஒத்திவைப்பு

ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் என ட்வீட் போட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

கொந்தளிக்கும் ரசிகர்கள்

கொந்தளிக்கும் ரசிகர்கள்

டிக்கெட் புக் செய்த பிறகு இப்படி சொல்கிறீர்களே. தவிர்க்க இயலாத காரணம் என்றெல்லாம் சொல்லி சமாளிக்காதீங்க. உண்மையான காரணம் என்னன்னு சொல்லுங்க. ரிலீஸ் தேதியை அறிவிக்கிறீர்கள். பிறகு தள்ளி வைக்கிறீர்கள். என்ன தான் பிரச்சனை. என்ன தான் நடக்குது என கோபமாக ட்விட்டரில் கேட்டுள்ளனர் ரசிகர்கள்.

என்ன காரணம் சொல்லுங்க

என்ன காரணம் சொல்லுங்க

சிம்பு பிரச்சனை காரணமா, அண்ணாத்த படத்தை ஓட வைக்கவா அல்லது கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் தியேட்டரில் அனுமதி என்ற அரசின் உத்தரவு காரணமா. முதலில் கொரோனாவை காரணமாக சொன்னீங்க. பிறகு தியேட்டர் திறக்கவில்லை என்றீர்கள். இப்போ என்ன மழை காரணமா. இந்த படத்திற்கு யாராவது அழுத்தம் கொடுக்கிறார்களா. மூன்று ஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணிருக்கோம். என்ன விளையாடுறீங்களா.

பாவம்யா சிம்பு

பாவம்யா சிம்பு

ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கிறீர்களா. எப்போ பிப்ரவரி 29 ஆ. நவம்பர் 25 தான் தீபாவளின்னு சொல்லிட்டு இருந்தீங்க. பாவம்யா சிம்பு. அந்த மனுஷன் எவ்வளவு தான் தாங்குவார். திரைக்க பின்னால் என்னதான்யா விளையாட்டு நடந்துகிட்டு இருக்கு. காரணம் என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க என ரசிகர்கள் சரமாறியாக கேள்வி கேட்டு துளைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X