ஒரே மேடையில் இத்தனை நடிகைகளா?..சென்னையிலா?..அண்ணாச்சி பட விழாவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை : லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்தடுத்து பலமுறை தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஆடியோ வெளியீட்டு நடைபெறும் தேதி, இடம், கலந்து கொள்பவர்கள் பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். ஜெடி- ஜெர்ரி இயக்கும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளதேலா, கீதிகா, விவேக், பிரபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சையின்ஸ் ஃபிக்சர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஊர்வசி ரெளதேலா மைக்ரோபயோலஜிஸ்ட் ரோலில் நடத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோவான அண்ணாச்சி
இது வரை தனது கடை விளம்பரங்களில் மட்டுமே பல்வேறு ஹீரோயின்களுடன் நடித்து வந்த அண்ணாச்சி, இந்த படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து ஹீரோவாக அறிமுகமாகிறார். விவேக் கடைசியாக நடித்த படம் என்பதாலும் இந்த படத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. விளம்பரங்களில் ஒரே சமயத்தில் பல நடிகைகளுடன் நடனமாடிய லெஜண்ட் சரவணன் இந்த படத்தில் ஒவ்வொரு பாட்டிற்கும் ஒரு நடிகையுடன் நடனமாடி உள்ளார்.

எத்தனை சிங்கிள்ப்பா
தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக மொசலோ மொசலு பாடல் ஒரு மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிட உள்ளது. இது வாடிவாசல் என துவங்கும் செகண்ட் சிங்கிள் மே 20 ம் தேதி வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் சிங்கிளில் யாஷிகா ஆனந்த், செகண்ட் சிங்கிளில் ராய் லட்சுமி என ஒவ்வொரு நடிகையாக ஆட வைத்து அசத்தி உள்ளார். இது தவிர இன்னும் இரண்டு சிங்கிள்களை வெளியிட போகிறார்களாம். இவற்றில் எந்ததெந்த நடிகைகள் வர போகிறார்கள் என தெரியவில்லை.

கமல் இப்படி செய்திருக்க கூடாது
செகண்ட் சிங்கிளுக்கு வாடிவாசல் என பெயர் வைத்ததால், சூர்யா பட டைட்டிலில் செகண்ட் சிங்கிள் வெளியிட்டதால், இந்த பாடல் சூர்யா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 29 ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மே 15 ம் தேதியே ஆடியோவை ரிலீஸ் செய்ய அண்ணாச்சி பிளான் செய்திருந்தாராம். ஆனால் கமல், லோகேஷ் கேட்டுக் கொண்டதால், தனது பட ஆடியோ விழாவை தள்ளி வைத்து விட்டு, விக்ரம் ஆடியோ விழாவை நடத்த ஓகே சொன்னாராம். ஆனால் இந்த விழாவிற்கு கமல் தன்னை அழைக்கவில்லை என அண்ணாச்சி வருத்தப்பட்டதாக கூட தகவல் வெளியானது.

ஒரே மேடையில் இத்தனை பேரா
அதற்கு பிறகு மே 26 ம் தேதி ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டாராம். ஆனால் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழா நடந்ததால், முதல்வர் கேட்டுக் கொண்டதால் மீண்டும் விட்டுக் கொடுத்தாராம் அண்ணாச்சி. இதனால் தான் தி லெஜண்ட் படம் ஆடியோ விழாவை மே 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு தள்ளி வைத்திருக்கிறாராம். இந்த விழாவில் தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா, ஊர்வசி ரவுத்தேலா, ராய் லட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, யாஷிகா ஆனந்த், நிபுர் சனோன், டிம்பிள் ஹரத்தி ஆகிய நடிகைகள் பங்கேற்க போகிறார்களாம். இதனால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











