For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  3 நிமிஷம் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்...விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலுக்கு எதுவும் இல்லையா?

  |

  சென்னை : விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு செம குஷி மூடில் இருந்து வருகிறார் கமல்ஹாசன். அவரது சமீப கால செயல்பாடுகளில் அது தெள்ள தெளிவாக தெரிகிறது.

  Recommended Video

  Vikram பட வசூல் சாதனை... கொண்டாட்ட மனநிலையில் KamalHaasan *Kollywood | Filmibeat Tamil

  தனது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசான 13 நாட்களில் 325 கோடிக்கும் அதிகமான தொகையை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

  விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள் செய்ய முடியாத சாதனையை கூட கமலின் விக்ரம் அசால்டாக அடித்து நொறுக்கி வருகிறது. விக்ரமின் வெற்றி நடை தொடர வேண்டும் என, கமல் படத்திற்கு மரியாதை அளித்து, யானை உள்ளிட்ட பல படங்கள் தங்களின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்கள் வரை தள்ளி வைத்துள்ளன.

  கோலிவுட் படங்களில் தொடர்ந்து வசூல்வேட்டை.. தமிழகத்தில் முதலிடத்தை நோக்கி நகரும் விக்ரம்!கோலிவுட் படங்களில் தொடர்ந்து வசூல்வேட்டை.. தமிழகத்தில் முதலிடத்தை நோக்கி நகரும் விக்ரம்!

  பரிசுகளை வாரி வழங்கிய கமல்

  பரிசுகளை வாரி வழங்கிய கமல்

  இதற்கிடையில் விக்ரம் படம் பெற்ற வெற்றியை கொண்டாட டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார், அசிஸ்டென்ட் டைரக்டர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக் ஆகியவற்றை பரிசாக வழங்கினார் கமல். டிவிஎஸ் அப்பாச்சி பைக் ஒன்றின் குறைந்தபட்ச விலை ஒன்றரை லட்சம்.

  சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்

  சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்

  அடுத்த நாளே சூர்யாவின் வீட்டிற்கே நேரில் சென்று ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக தந்தார் கமல். அதுவும் புதியதாக வாங்கியது கூட கிடையாது, பல வருடங்களாக தான் சென்டிமென்ட் மற்றும் கெளரவமாக நினைத்து அறிந்து வந்த ரோலக்ஸ் வாட்சை சூர்யாவிற்கு பரிசாக கொடுத்தார் கமல். இத்தனைக்கும் விக்ரம் படத்தின் க்ளைமாக்சில் வெறும் 3 நிமிட காட்சிகளிலேயே சூர்யா நடித்திருந்தார். இந்த சீன் படத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

  அனிருத்திற்கு என்ன கொடுத்தார்

  அனிருத்திற்கு என்ன கொடுத்தார்

  லோகேஷிற்கு கார், அசிஸ்டென்ட்களுக்கு பைக், சூர்யாவிற்கு வாட்ச் பரிசாக கொடுத்த கமல், உங்களுக்கு என்ன கொடுத்தார் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் விக்ரம் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திடம் ரசிகர்கள் கேட்டனர். அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதை கூட கெளரவமாக, எனக்கு விக்ரம் படம் கொடுத்தார் என்றார் அனிருத் ஜாலியாக.

  இவங்களுக்கு எதுவும் கொடுக்கலியா

  இவங்களுக்கு எதுவும் கொடுக்கலியா

  எல்லாம் சரி தான். ஆனால் வரிசையாக பலருக்கும் பரிசு கொடுத்து, சோஷியல் மீடியாவில் பாராட்டு, பாராட்டு வீடியோ, நன்றி வீடியோ என வெளியிட்டு வரும் கமல், படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசிலிற்கு மட்டும் ஏன் எந்த பரிசும் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவங்கள மட்டும் எப்படி மறந்து போனார் என கேட்கின்றனர்.

  இவங்கள எப்படி மறந்தார் கமல்

  இவங்கள எப்படி மறந்தார் கமல்

  3 நிமிடங்கள் மட்டுமே நடித்த சூர்யாவிற்கு பரிசு கொடுத்து, பல இடங்களில் குறிப்பிட்டு பாராட்டியதுடன், விக்ரம் 3 படத்தில் நடிக்கவும் புக் செய்திருக்கிறார். இத்தனைக்கும் படத்தின் மெயின் வில்லனே விஜய் சேதுபதி தான். சந்தன தேவன் ரோலில் அலட்டிக்காமல் சிறப்பாக வில்லத்தனம் காட்டியிருந்தார். இதே போல் ஆரம்பம் முதல் கடைசி வரை போலீஸ் அதிகாரி அமர் ரோலில் மிரட்டி இருப்பார் ஃபகத் ஃபாசில். இவர்களுக்கு நன்றி சொன்ன கமல், பரிசு வழங்கவோ, பெரிதாக பேட்டிகளில் குறிப்பிட்டு பேசவோ இல்லையே. இது ஏன் என ரசிகர்கள் புரியாமல் கேட்டு வருகின்றனர்.

   ஒரு தகவல் கூட இல்லையே

  ஒரு தகவல் கூட இல்லையே

  விக்ரம் படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட கமல் நன்றி தெரிவித்துள்ளார். ஃபகத் ஃபாசிலின் நடிப்பை பார்த்து ஷுட்டிங் ஸ்பாட்டில் கமல் பிரம்மித்து போனதாக கூட சில தகவல்கள் வெளியாகின. அப்படி இருக்கையில், படம் ரிலீசாகி இத்தனை நாட்கள் ஆகியும் அவர்களுக்கு கமல் ஏன் பரிசு வழங்கவில்லை, அவர்கள் இருவரும் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் கூட வரவில்லையே என ரசிகர்கள் ஆதரங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  English summary
  Fans asked that why Kamalhaasan forget to gift or praised Vijay Sethupathi and Fahad Faazil. Even he gifter Rolex watch to Suriya for playing rolex role in 3 minutes scene for climax. But the main villain Vijay Sethupathi and key role played by Fahad Fazil got no gift from Kamal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X