»   »  வாயைக் கொடுத்து… வைரமுத்துவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வாயைக் கொடுத்து… வைரமுத்துவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்டெழுதியே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... இது திருவிளையாடல் வசனம். ஆனால் வைரமுத்துவோ இது எதிலும் சேராத மூன்றாவது ரகம்.

தனக்கு தானே பிஆர்.ஓவாக இருந்து பெயரை கட்டாயப்படுத்தி வாங்கிக்கொள்ளும் புலவர் இனத்தில் சேருவார்.


Fans blasting Vairamuthu for his speech against Kabali

கபாலி படத்தை தோல்வி என்று காழ்ப்புணர்ச்சியுடன் வைரமுத்து பேசிய வீடியோ வைரலாக பரவ, ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லாருமே வைரமுத்துவை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இதுவரை ரஜினி படங்களை அண்டி பிழைப்பு நடத்தி வந்த வைரமுத்துக்கு ஏன் இந்த புத்தி? என்று நேரடியாகவே ஒரு ரஜினி ரசிகர் கேட்டிருக்கிறார்.


வைரமுத்து பேசும் வீடியோவில் வேண்டுமென்று அவர் கபாலியை வம்பிக்கிழுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. முதலில் கபாலியில் ரஜினிக்கு ரஞ்சித் கோட் மாட்டி விட்டிருப்பதே அரிமா சங்கத்தினர் கோட் மாட்டியிருப்பதை பார்த்து காப்பி அடித்து தான் என்பவர் கபாலியின் தோல்வியைத் தாண்டி.. என்று இரண்டு முறை வேண்டுமென்றே உச்சரிக்கிறார்.


வழக்கமாக ரஜினி இயக்குனர்களை கட்டாயப்படுத்தி பாட்டு எழுதும் வாய்ப்பு வாங்குபவர் இந்த முறை அது ரஞ்சித்திடம் நடக்கவில்லை என்பதுதான் இந்த விஷப் பேச்சுக்கு காரணம் என்கிறார்கள். வைரமுத்து வாய்ப்பு கேட்டதை ரஜினி கவனத்துக்கு ரஞ்சித் எடுத்து சென்றிருக்கிறார். இது உங்க படம்... நான் இதுலலாம் தலையிட மாட்டேன் என்று ரஜினி சொல்லிவிடவே ரஞ்சித் தனது டீமையே பாடல் எழுத வைத்திருக்கிறார். இது தெரிந்துதான் ரஜினியை பகைத்துக்கொள்ளவே வைரமுத்து இப்படி பேசியிருக்கிறார் என்றும் தகவல் பரவுகிறது.


யாருக்குத் தெரியும்...? வைரமுத்துவின் பி.ஆர்.ஓ வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்...

English summary
Vairamuthu's hatred speech against Rajini and Kabali irked the fans of the superstar and they gave fitting reply online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil