twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைத்தட்டி பாராட்டிய ரஜினி..மன்னிப்பு கேட்கச் சொன்ன ரசிகர்கள் ..வடிவுக்கரசியின் திகில் அனுபவம்

    |

    ரஜினிகாந்தை திட்டி வசனம் பேசுவதற்காக ரயிலை மறித்து மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்களுடனான திகில் அனுபவம் பற்றி வடிவுக்கரசி பகிர்ந்துள்ளார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்தில் வயதான மூதாட்டி வேடத்தில் ரஜினியை பிடிக்காதவராக வடிவுக்கரசி நடித்திருப்பார்.

    ரஜினியை அந்த படத்தில் மிகவும் தரக்குறைவாக திட்டுவார் வடிவுக்கரசி. இந்தக்காட்சியை ரஜினிகாந்த கைத்தட்டி செட்டில் பாராட்டியதாக வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷிற்காக வருத்தப்பட்ட ரசிகர்கள்.. என்ன காரணம்னு தெரியுமா? கீர்த்தி சுரேஷிற்காக வருத்தப்பட்ட ரசிகர்கள்.. என்ன காரணம்னு தெரியுமா?

    முதல்மரியாதையில் சிவாஜிக்கு டஃப் கொடுத்த வடிவுக்கரசி

    முதல்மரியாதையில் சிவாஜிக்கு டஃப் கொடுத்த வடிவுக்கரசி

    80-களில் அறிமுகமான வடிவுக்கரசி மிகத் திறமை வாய்ந்தவர். கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் உடன் படிக்காதவன் படத்தில் அவரது அண்ணியாக வந்து குடும்பத்தை பிரிப்பவராக நடித்திருப்பார். பின்னர் வீரா படத்தில் அம்மாவாக நடித்திருப்பார். முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக வந்து அவரை எப்பொழுதும் கடுமையான சொற்களால் திட்டிக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

    85 வயது மூதாட்டியாக நடித்த வடிவுக்கரசி

    85 வயது மூதாட்டியாக நடித்த வடிவுக்கரசி

    இப்படி வடிவுக்கரசியின் பாத்திரம் பல படங்களில் பேசப்பட்ட ஒன்று ரஜினிகாந்த் தனது நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்த படம் அருணாச்சலம். இந்த படத்தில் ரஜினிகாந்த் தனது நண்பர்கள், திரையுலகில் பாதிக்கப்பட்டவர்களை தயாரிப்பாளர்கள் ஆக்கி அவர்களுக்காக நடித்து கொடுத்தார். அருணாச்சலம் படத்தில் 85 வயது மூதாட்டியாக ரஜினிகாந்தை எதிர்க்கும், வெறுக்கும் கொடூரமானவராக வடிவுக்கரசி நடித்திருப்பார். இந்த படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து வடிவுக்கரசி ஒரு பேட்டியில் சுவாரசியமாக தெரிவித்துள்ளார் .

    ரஜினியுடன் அருணாச்சலம் பட அனுபவம்

    ரஜினியுடன் அருணாச்சலம் பட அனுபவம்

    அந்த பேட்டியில் அருணாச்சலம் படம் பற்றி செய்தியாளர் கேட்க "அதுவா என் வாழ்க்கையில மறக்க முடியாத விஷயம்" என்று தனது அனுபவத்தை விவரித்து சொல்கிறார் வடிவுக்கரசி. இந்த படத்தில் ஒரு காட்சியில் மாடியில் இருந்து இறங்கியபடி வடிவுக்கரசி வசனம் பேச வேண்டும். இது பற்றி வடிவுக்கரசி கூறுகையில் "85 வயது கிழவி தலை ஆட வேண்டும், கையில் பிடித்து இருக்கும் கோல் கையோடு சேர்ந்து ஆட வேண்டும், கூன் விழுந்த முதுகுடன் படிகளில் இறங்கியபடியே நீளமான வசனத்தை பேச வேண்டும்.

    அனாதைப்பயலே வசனம் பேச பயந்த வடிவுக்கரசி

    அனாதைப்பயலே வசனம் பேச பயந்த வடிவுக்கரசி

    அதற்கு முன் வசனகர்த்தா கிரேசி மோகன் வசனத்தை சொல்லும்பொழுது 'அனாதை பயலே' என்ற வார்த்தையை சொன்னார். நான் அதிர்ந்து போய், யார ரஜினிகாந்தையா அப்படின்னு கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல இது அனுமதிக்கப்பட்ட வசனம் என்றார். நான் அது இல்லீங்க ரஜினி சார் கிட்ட இதைப்பற்றி என்று கேட்க அவர் எதுவும் நினைத்துக்கொள்ள மாட்டார் என்று கூறி வசனத்தை சொல்லி பேசச்சொன்னார். அதுக்கு பிறகு நான் அந்த வசனத்தை பேசியபடி அனாதை பயலே என்று சொல்லி நீளமாக வசனத்தை பேசிட்டு கீழ வந்து முடிக்கும்போது அனாதை பயலே அப்படின்னு கோவமா பேசி முடித்தேன்.

    கைத்தட்டி பாராட்டிய ரஜினி மன்னிப்பு கேட்கச் சொன்ன ரசிகர்கள்

    கைத்தட்டி பாராட்டிய ரஜினி மன்னிப்பு கேட்கச் சொன்ன ரசிகர்கள்

    பேசி முடித்த உடனே எனக்கு கை கால் எல்லாம் உதற ஆரம்பிச்சது, பேசி முடித்த அடுத்த நொடி ஓரமா இருந்து பெரிய கைதட்டல் கிளம்புச்சு. திரும்பி பார்த்தா ரஜினிகாந்த் அவர் கைதட்ட ஆரம்பிச்ச உடனே அங்கிருந்து 2500 பேரும் கைய தட்டுனாங்க. ரஜினி ஓடிவந்து என் தோளை பிடிச்சு உலுக்கி எப்படி இவ்வளவு நேச்சுரலா நடிக்கிறீங்க என்று ரஜினி கேட்க, சார் இல்ல அந்த வசனம் அப்படின்னு நான் சொல்ல வசனத்தை பத்தி பிரச்சனை இல்லை அவ்வளவு அருமையா நடிக்கிறீங்கன்னு பாராட்டினார். இதைவிட எனக்கு வேறு என்ன வாழ்க்கையில பெரிய விருது வேணும். இதே மாதிரி ஆச்சி மனோரமா, கவுண்டமணி சிங்கிள் ஷாட்டில் நடிக்கும்போது அரங்கமே கைத்தட்டும் அப்போதெல்லாம் எனக்கு இது மாதிரி ஒரு வாய்ப்பு, கைதட்டல் கிடைக்காதானு நான் ஏங்கி இருக்கேன். ஆனா மக்களுடைய கைதட்டை தாண்டி சூப்பர் ஸ்டார் என்னை கைதட்டி பாராட்டினது மிகப்பெரிய விஷயம்" என்று சொன்னார்.

    ரயில் நிலையத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

    ரயில் நிலையத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

    அதற்குப் பிறகு வடிவுக்கரசி சொன்னதுதான் சுவாரஸ்யமான விஷயம். அதன் பின்னர் திண்டுக்கல்லிலிருந்து சென்னை திரும்ப காலை 11 மணி ரயிலில் ஏறி சீட் நம்பர் பார்த்து அமர்கிறேன், திடீர்னு டிடிஆர் வந்து அம்மா கொஞ்சம் வெளிய வாங்க அப்படின்னு கூப்பிட ஐயோ பொட்டி மாறி வந்துட்டேனான்னு நினைத்து ஏதாவது பத்திரிகை போய் என்ன சார் என்ன விஷயம் அப்படின்னு கேட்க வெளியில ரஜினி ரசிகர்கள் எல்லாம் காத்துகிட்டு இருக்காங்க, நீங்க அவரை திட்டிட்டீங்களாம் மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்று டிடிஆர் சார் அது படத்துல நான் பேசின வசனம் என்று நான் சொல்ல, அதெல்லாம் ஒத்துக்க மாட்டேங்குறாங்க நீங்க வந்து ஒரு சாரி சொல்லிடுங்க அப்படின்னு டிடிஆர் சொல்ல நான் பயந்தபடி போய் பார்த்தா ஒரே கும்பல்.

    ரகுவரன் திட்டுகிறார் அவரை மன்னிப்பு கேட்கச்சொல்லலையே

    ரகுவரன் திட்டுகிறார் அவரை மன்னிப்பு கேட்கச்சொல்லலையே

    டிடிஆர் முன்னாடி நிற்க நான் பின்னாடி நின்னுகிட்டு என்னை மன்னிச்சிடுங்க இனிமே இப்படி பேச மாட்டேன் அப்படின்னு சொன்னேன், பிறகு என் வாய் சும்மா இல்லாமல் ரகுவரன் மட்டும் அந்த மாதிரி எல்லாம் அவரை கண்டபடி பேசுறாரு, அவரை எல்லாம் கேட்காமல் என்னை மட்டும் கேட்கிறீங்களே அப்படின்னு துடுக்கத்தனமா கேட்க, அவரைத்தான் தலைவர் போட்டு தாக்குவாரே என்று ரசிகர்கள் பதிலளிக்க சரிங்க சரிங்க என்று நான் சமாளித்து வந்துவிட்டேன். அதற்கு பிறகு மன்னிப்பு கேட்டதால் தண்டவாளம் முன்னாடி படுத்து இருந்த ரசிகர்கள் எழுந்து சென்றனர். அப்புறமா ட்ரெயின் கிளம்பி போச்சு. இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொல்லுவேன்" என்று வடிவுக்கரசி சொல்லி இருக்கிறார்.

    English summary
    fans who stopped a train and want her apologized to for insulting Rajinikanth. Vadivukarasi shared her horror experience..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X