twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "அரசியல் எல்லாம் வேண்டாம்... அஜித் மட்டும் போதும் ".... நெகிழும் ரசிகர்கள்!

    அரசியல் நிலைபாடு குறித்து அஜித்தின் அறிக்கைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    |

    சென்னை : தனது அரசியல் நிலைபாடு குறித்து அஜித் வெளியிட்ட அறிக்கைக்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இரு தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியில் சிலர் இணைந்தனர். இதையடுத்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் பாஜக பக்கம் இருப்பது போன்ற ஒரு தோன்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல் நடிகர் அஜித்தின் ஆதரவும் அந்த கட்சிக்கு இருப்பது போன்ற ஒரு மாயையும் ஏற்படுத்தப்பட்டன.

    தமிழக அரசியல் அரங்கில் இந்த விவகாரம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அஜித் தனது அரசியல் நிலைபாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு அனைவரையும் தெளிவுபடுத்தினார். தான் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்றும், எந்த குறிப்பிட்ட கட்சிக்கும் தனது ரசிகர்களை ஆதரவு தர வற்புறுத்தமாட்டேன் என்றும் அஜித் அதில் கூறியிருந்தார்.

    அஜித்தின் இந்த அறிக்கை பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களை அஜித்தின் இந்த அறிக்கையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அஜித் மட்டும் போதும்

    "அரசியல் எல்லாம் வேண்டாம்... அஜித் மட்டும் போதும் " என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தல தல தான், தல போல வருமா என்றும் சில ரசிர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    லோக்கல் முதல் நேஷனல் வரை

    "லோக்கல் தொலைக்காட்சி முதல் தேசிய செய்தி தொலைக்காட்சிகள் வரை அஜித்தின் அறிக்கை தான் தலைப்பு செய்தியாக இருக்கிறது. தைரியமான மற்றும் மிகத்தெளிவாக அறிக்கை" என ஒரு ரசிகர் பாராட்டியுள்ளார்.

    இதனால தான் அவர் தல

    "இதனால தான் என்றும் அவர் தல. ரசிகர்களை வைத்து அரசியல் செய்யாத ஒரே நடிகர். தன் படத்தை பற்றி தான் பேசாமல் மக்களை பேசவைக்கும் ஒரே ஹீரோ" என இந்த ரசிகர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    அன்றும் இன்றும் எப்போதும்...

    "ரசிகர்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தும் நடிகர்களுக்கு மத்தியில், எப்போதும் ஒரே மாதிரி இருப்பவர் நடிகர் அஜித்" என இவர் கூறியுள்ளார். மேலும் அஜித்தின் பழைய வீடியோ பேட்டி ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

    அஜித் ரசிகன்

    "தரம் தாழ்ந்த தலைவனுக்கு தொண்டனாய் இருப்பதை விட தலை நிமிர்ந்து தல ரசிகனாக இருந்து பார் தன்னம்பிக்கையின் அர்த்தம் புரியும்" என இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஏராளமானோர் நடிகர் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர்.

    முதல்வர் கனவு

    "தான் நடித்த இரண்டு மூன்று படங்கள் ஹிட் ஆய்டாலே நாம தான் அடுத்த முதல்வர் என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில் தான் நடித்த தொடர் படங்கள் வென்றாளும் தனது அரசியல் நிலைப்பாட்டை தைரியமாக அறிவிக்கும் திராணி என் தல இடம் மட்டுமே. அவர் மீது அன்பு செலுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம்" என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

    English summary
    Actor Ajith's statement about his political stand is largely appreciated by his fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X