அடேங்கப்பா...ஏகே 61 க்கு இப்படி ஒரு அப்டேட்டா...எதிர்பார்க்கவே இல்லையே

சென்னை : அஜித் நடித்து வரும் ஏகே 61 படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுவரை எந்த அஜித் படத்திலும் செய்யாத விஷயங்களை எல்லாம் இந்த படத்திற்காக செய்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கி விட்டது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் அஜித். ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷுட்டிங் கடந்த ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

செம ஃபிட்டான அஜித்

செம ஃபிட்டான அஜித்

அஜித், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கும் ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித், வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிக்கிறார். இரண்டு ரோல்களுக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக 25 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறாராம் அஜித்.

ஏகே 61 ரிலீஸ் எப்போ

ஏகே 61 ரிலீஸ் எப்போ

அஜித் ஸ்லிம்மாக, செம ஃபிட்டாக மாறி இருக்கும் போட்டோ சமீபத்தில் வெளியாகி செம டிரெண்டானது. உடல் எடையை குறைப்பதற்காக கேரளாவில் அஜித் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்ட போட்டோக்களும் வெளியாகி, டிரெண்டிங்காகின. ஏகே 61 படத்தை ஜுலை மாதத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டும் என போனி கபூர் கன்டிஷன் போட்டுள்ளதால் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

ஹெச்.வினோத் போட்ட கன்டிஷன்

ஹெச்.வினோத் போட்ட கன்டிஷன்

படம் பற்றிய எந்த தகவலும் கொஞ்சமும் லீக் ஆகி விடக்கூடாது என்பதால் ஷுட்டிங் ஸ்பாட்டில் யாரும் எந்த காரணத்திற்காகவும் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என டைரக்டர் வினோத் கண்டிப்பாக கூறி இருக்கிறாராம். வலிமை படத்தில் கிடைத்த நெகடிவ் கமெண்ட்களை மனதில் வைத்து, அதற்கு பதில் கூறும் விதமாக ஏகே 61 படத்தை வினோத் எடுத்து வருகிறாராம். இந்த படத்தில் வலிமை படத்தை போல் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகள் குறைவாக உள்ளதால், மிரட்டலான மாஸ் காட்சிகள் நிறைய உள்ளதாம்.

அட இப்படி ஒரு அப்டேட்டா

அட இப்படி ஒரு அப்டேட்டா

ஏகே 61 படத்திற்காக ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில், சென்னை மவுண்ட் ரோடு போன்று பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, ஷுட்டிங் நடத்தப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள வங்கி போன்ற செட் மிக பிரம்மாண்டமாக பெரியதாக அமைக்கப்பட்டுள்ளதாம். அதுவும் 9 ஏக்கரில். இதுவரை அஜித்தின் வேறு எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு பெரிய செட் போடப்பட்டது இல்லையாம்.

Recommended Video

நடிகர் Ajithkumarக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய MS Bhaskar |Filmibeat Tamil
மெளனம் காக்கும் போனிகபூர்

மெளனம் காக்கும் போனிகபூர்

ஏகே 61 படத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த செட்டில் தான் எடுக்கப்பட உள்ளதாம். சில காட்சிகள் புதுச்சேரியில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். ஏகே 61 படத்திற்காக இவ்வளவு பெரிய செட் அமைக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. படம் எப்போது வரும், அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அஜித்தின் பிறந்தநாளான மே 1 ம் தேதியேன்று ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பற்றி போனி கபூர் தற்போது வரை வாய்திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X