என்னால அழுகைய அடக்க முடியல...என்னாச்சு...எதற்காக டிடி இப்படி சொன்னார் ?

சென்னை : பிரபல டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, தன்னால் அழுகையை அடக்க முடியவில்லை என ட்வீட் செய்துள்ளார். இவரின் ட்வீட்டை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு, லைக்கும் அளித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் 2010 களில் பிரபலமான பல ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் டிடி. இவர் பல படங்களிலும் சப்போர்டிங் ரோல்களில் நடித்துள்ளார். டாப் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கொண்டிருப்பது மட்டுமல்ல, பல கிசுகிசுக்களிலும் சிக்கியவர் டிடி. இந்நிலையில் இவர் போட்டுள்ள ட்வீட் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.

ஓ...இப்படி ஒரு நட்பு இருக்கா

ஓ...இப்படி ஒரு நட்பு இருக்கா

டிடி.,யும் டைரக்டர் நெல்சன் திலீப்குமாரும் பல ஆண்டு கால நண்பர்களாம். விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். விஜய் டிவியில் பணிபுரிந்த போது தான் சிவகார்த்திகேயன், கவின் ஆகியோருடன் நெல்சனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு நெல்சன் திலீப்குமார் முதல் படத்திலேயே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படம் பேசப்பட்டதால் சினிமாவில் பிஸியான டைரக்டராகி விட்டார் நெல்சன்.

தலைவர் 169 டைரக்டர்

தலைவர் 169 டைரக்டர்

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர், விஜய்யுடன் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கி உள்ளார் நெல்சன். வரிசையாக அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஆகி வரும் நிலையில், ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பெஷல் வீடியோவுடன் தலைவர் 169 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

படம் எப்போ வரும்

படம் எப்போ வரும்

தலைவர் 169 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். படம் எப்போது வரும் என காத்திருப்பதாகவும் கூறி வருகின்றனர். தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் மே மாதம் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அழுகைய அடக்க முடியலடா

அழுகைய அடக்க முடியலடா

இந்நிலையில் தலைவர் 169 அறிவிப்பு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள டிடி, என்னால அழுகைய அடக்க முடியலடா நெல்சா...தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு டா...என் தலைவா ரஜினி சார்... தலைவர் ரஜினி சார், சன் பிக்சர்ஸ், அனிருத்திற்கு நன்றி. அனிருத் வெறி பிஜிஎம். போங்கப்பா ரொம்ப ஹேப்பியா இருக்கு என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Dhurv -வை பங்கமாய் கலாய்த்த Chiyaan Vikram | Bobby Simha, Team Interview
தீயாய் பரவும் டிடி.,யின் ட்வீட்

தீயாய் பரவும் டிடி.,யின் ட்வீட்

டிடியின் இந்த எமோஷனல் ட்வீட்டை ஏராளமானோர் ரீட்வீட் செய்து, தீயாய் பகிர்ந்து வருகிறார்கள். இந்த ட்வீட்டை குறிப்பிட்டு ரஜினியை கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோவில் இருக்கும் ரஜினியின் ஸ்டைல், சிரிப்பு ஆகியவற்றை புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X