ராஜா கைய வச்சா...Strange ஆ போனதில்ல... ஆனா வேற ரேஞ்சில் இருக்கே
சென்னை : செம மாஸாக இளையராஜா போட்டுள்ள ட்வீட்டிற்கு லைக்குகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. வேற ரேஞ்சில் இருக்கும் இவரின் போஸ்டை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை தாண்டி உலக அளவில் இசை மேதை, இசைஞானி என பலராலும் போற்றப்படுபவர் இளையராஜா. இசையில் சிகரம் தொட்ட இளையராஜா, இசைக்கச்சேரிகள், சினிமா என செம பிஸியாக இருந்து வருகிறார்.

ரஜினியுடன் திடீர் சந்திப்பு
இதற்கிடையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார். பிறகு கிளம்பிய இளையராஜாவுடன் ரஜினியும் கிளம்பிச் சென்று, இளையராஜாவின் ஸ்டூடியோவில் நடந்த இசைக்கச்சேரிக்கான ரிகர்சலை பார்த்து ரசித்து, பாராட்டி உள்ளார். இவர்கள் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்கள் நேற்று செம டிரெண்டானது.

இதற்காக தான் சந்திப்பு
எதற்காக இந்த திடீர் சந்திப்பு என விசாரித்த போது ஜுன் 2 ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை கொடிசியா மஹாலில் இளையராஜாவின் சிறப்பு இசைக் கச்சேரி நடைபெற உள்ளதாம். இதற்காக தனிப்பட்ட முறையில், தனது நீண்ட கால சினிமா நண்பரான ரஜினியை நேரில் சென்று அழைப்பு விடுக்கத்தான் இந்த சந்திப்பு என கூறப்பட்டது.
ராஜா போட்ட மாஸ் ட்வீட்
இதைத் தொடர்ந்து இன்று, ராஜா கைய வச்சா...Strange ஆன போனதில்ல என்ற கேப்ஷனோடு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் இளையராஜா. அந்த வீடியோவில் ஐந்து சிறுவர்கள் ஃபன் கேம் விளையாட செல்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் தனியாக உள்ளே சென்று சுற்றி பார்க்கிறான். கரன்ட் திடீரென கட் ஆனதும் மற்றவர்களும் அவன் அருகில் வர, அவர்கள் ஓடுகிறார்கள். ஒரு அடர்ந்த காட்டில் தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கப்பட்ட பாதையில் செல்கிறார்கள்.

அட அருமையா இருக்கே
அங்கு கடலோரத்தில் இளையராஜா தனது குழுவினருடன் இசையமைத்து கொண்டிருக்கிறார். வானத்தில் சிவப்பு நிறத்தில் பெரிய ஒளி தெரிகிறது. இளையராஜா இசையமைப்பதை சிறுவர்கள் ஆச்சரியாக பார்த்துக் கொண்டிருக்க, திடீரென இளையர்கள் சிலர் காட்டிற்குற்குள் காரில் வந்து இறங்குகிறார்கள். அனல் பறக்கும் சண்டை, Welcome to the world of Strange things என்ற வாசகத்துடன் நெட்டிஃபிளிக்ஸ் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த விளம்பரம் என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்க துவங்கினர்.

இதற்கு தான் இந்த ட்வீட்டா
இளையராஜா இசையில் உருவாக்கப்பட்டுள்ள Stanger Things என்ற புதிய வெப்சீரிசிற்கான விளம்பரம் தான் இது. இந்த வெப் சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ளது. முதல் பாகம் மே 27 ம் தேதியும் இரண்டாம் பாகம் ஜுலை 1 ம் தேதியும் ஒளிபரப்பாக உள்ளதாம். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வேற ரேஞ்சில் இருக்கே. இளையராஜா... இளையராஜா தான். இதனால் தான் அவரை ஞானி என்கிறார்கள் என புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











