அழகழகான காஸ்ட்யூமில் இளமை பொங்க, துள்ளலான ரஜினி – நயன்தாரா

சென்னை : ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை லிரிக்கல் வீடியோவாக சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. மனதை வருடும் மெலடியாக உருவாக்கப்பட்டுள்ள சாரல்...சாரல்...காற்றே என துவங்கும் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Fans celebrates rajini - nayantharas romantic second single

ரஜினி - நயன்தாராவின் இளமை பொங்கும் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். விஸ்வாசம் படத்தில் வரும் வானே...வானே பாடலை நினைவுபடுத்துவது போல் வயல்வெளிகள், புடவையில் நயன்தாரா நடந்து வருவது என இருந்தாலும், இடையிடையே வரும் கனவு காட்சிகள், கலர் கலரான அழகிய காஸ்ட்யூம்கள் வேற லெவலில் இந்த பாடலை ஹிட் ஆக்கி உள்ளது.

இன்றைய ரொமான்டிக் ஹீரோக்களை ஓரங்கட்டும் வகையில், வேஷ்டி சட்டையில் கிராமத்து கெட்அப்பில், துள்ளி குதித்து வயல்வெளியில் ஓடி வருகிறார் ரஜினி. இதை பார்த்து விட்டு, இந்த மாதிரி எல்லாம் ஒருவரும் பண்ண முடியாது ரஜினி என்றால் அந்த குறும்பு துடிப்பு ஸ்டைல் இவை எல்லாம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது . சுத்தி போடு தலைவா என ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி படத்தில் இப்படி ஒரு அழகான ரொமான்டிக் பாடலை பார்க்க முடிவது சந்தோஷமாக உள்ளதாகவும், அழகான வரிகள், அழகான இசை, ரஜினியின் நடனம் ரசிக்க வைத்து, பார்த்ததுமே அனைவரையும் கவர்ந்து விடுகிறது. இமான் , ரஜினிக்காகவே அற்புதமான ரொமான்டிக் இசையை கொடுத்துள்ளார் என பலர் பாராட்டி வருகிறார்கள்.

கருப்பு உடையில் கொட்டும் அருவியின் பின்னணியில் ரஜினி, நயன்தாராவின் காதல் காட்சியும் சரி, வயல்வெளியில் பல வண்ண உடைகளில் இருவரும் சுற்றி வரும் காட்சிகளும் சரி கண்ணுக்கு குலுமையாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல், அழகான சுத்தமான தமிழ் வார்த்தைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த பாடலுக்கு மற்றொரு ப்ளசாக அமைந்துள்ளது.

தலைவர் துள்ளிக் குதித்து நடக்கும் இந்த ஒரு காட்சியே போதும், அண்ணாத்தே படத்தை 20 தடவைக்கு மேல் பார்ப்பதற்கு. அய்யோ தலைவா, 72 வயதுன்னா அந்த ஆண்டவன் கூட பொறாமைபடுவான் உங்களைப் பார்த்து என ரஜினி துள்ளி குதித்து வரும் காட்சிகளை தான் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

அண்ணாத்த செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ரஜினி ரசிகர்கள் AnnaattheSecondSingle என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதை ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதில் ஏராளமானோர் பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X