Don't Miss!
- News
மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
போட்றா வெடிய...தளபதி 68, தளபதி 69 டைரக்டர்கள் இவங்க தானா?...குஷியான ரசிகர்கள்
சென்னை : நடிகர் விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
வாரிசு படத்தின் ஷுட்டிங் வேலைகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐதராபாத்தில் நடந்து வந்த ஷுட்டிங் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதத்தில் வாரிசு படத்தின் ஷுட்டிங் முழுவதும் நிறைவடைந்து விடும் என்றும், அதற்கு பிறகு விஜய் ஒரு மாதம் பிரேக் எடுத்துக் கொண்டு, அக்டோபர் மாதத்தில் தளபதி 67 படத்தின் வேலைகளை துவக்குவார் என சொல்லப்படுகிறது.
பிருத்விராஜ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து 2 மாஸ் அப்டேட்: 'தீர்ப்பு’ டீசர், 'கடுவா’ ஓடிடி ரிலீஸ்!

இன்னும் அறிவிப்பே வரலியே
தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க போகிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகி விட்டது. ஆனாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. விரைவில் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என சொல்லப்படுகிறது.

தளபதி 67 கதை இது தானா
மாஸ்டர் படத்தை துவக்கிய அதே அக்டோபர் மாதத்தில் தளபதி 67 படத்தையும் துவக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் மதுரையை மையமாக கொண்ட கேங்ஸ்டர் ரோலில் நடிக்க உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போன்றது எனவும் சொல்லப்படுகிறது.

விஜய்யை அடுத்து இயக்க போவது யார்
இந்த சமயத்தில், தளபதி 67 படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்க போகிறார்கள் என்பது தொடர்பான புதிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. லேட்டஸ்ட் தகவலின் படி, லோகேஷ் கனகராஜை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அட செம தகவலா இருக்கே
விஜய், சிறுத்தை சிவா இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதே போல் விஜய் அடுத்ததாக டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும், அதை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் சிபி சக்கரவர்த்தி, ரஜினியை வைத்து படம் இயக்க போவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.சிபி தற்போது கதை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது ரஜினிக்கா அல்லது விஜய்க்கா என்பது தெரியவில்லை.

என்னப்பா இவ்வளவு பிஸியா இருக்காங்க
விஜய் - சிறுத்தை சிவா- சன் பிக்சர்ஸ், விஜய் - சிபி - லைகா இந்த இரண்டு படங்களில் எதில் விஜய் முதலில் நடிக்க போகிறார் என தெரியவில்லை. விஜய் நடிக்கும் மற்றொரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தளபதி 68 ஆ அல்லது தளபதி 69 ஆ என்பது உறுதியாக தெரியவில்லை.சிறுத்தை சிவா, சூர்யா 42 படத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா, சிபி சக்கரவர்த்தி இருவருமே தரமான படத்தை வழங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள். இதனால் யார் விஜய்யின் முதல் தேர்வாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.