»   »  சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா… ஒரே மேடையில் கமல், சிவகார்த்திக்கேயன்

சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழா… ஒரே மேடையில் கமல், சிவகார்த்திக்கேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூரில் நடந்த பா.சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவில் நடிகர்கள் கமலஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் நடிகை ஹன்சிகா ஆங்கிலத்தில் பேசியதை சிவகார்த்திக்கேயன் மொழி பெயர்த்தார்.

மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் சிவகார்த்திக்கேயனை அடிக்கப் பாய்ந்தனர். ஆனாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல ஒரே மேடையில் கமலுடன் பங்கேற்றார் சிவகார்த்திக்கேயன்.

நான்காம் தலைமுறை விழா

நான்காம் தலைமுறை விழா

விழாவில் பேசிய நடிகர் கமலஹாசன், இந்த விழாவில் நான் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறை விழா. இவர்களது தாத்தா சி.பா. ஆதித்தனார் அவர்களை சிறு வயதில் நான் பார்த்துள்ளேன். சாதாரணமான தமிழனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் அவர்.

சிவந்தி ஆதித்தன் சாதனைகள்

சிவந்தி ஆதித்தன் சாதனைகள்

அவருக்கு அடுத்த தலைமுறையில் சிவந்தி அய்யாவை எனக்கு தெரியும். விளையாட்டு துறையில் அவர் பல சாதனைகள் படைத்தவர். நானும், அவரும் பல்வேறு தரப்பில் தனியாக சந்தித்த போது கராத்தே மற்றும் உடற்பயிற்சி குறித்து அதிகம் பேசியுள்ளோம்.பத்திரிகை உலகிலும் அவர் மிகப் பெரிய சாதனைகள் படைத்து உள்ளார். அவரது அன்பு என்னை என்றும் பிரமிக்க வைக்கும்.

ஏழைகளுக்கு கல்வி

ஏழைகளுக்கு கல்வி

அதே அன்பு பாசத்தை 3ம் தலைமுறையான பாலசுப்பிரமணிய ஆதித்தனிடம் கண்டு வியப்புற்றேன். இந்த வளாகத்தில் ஏழு கல்லூரிகள் திறந்துள்ளார்கள். இந்த கல்லூரிகளில் அரசு விதித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை என்று கூறினார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்கது. கல்வியை வியாபாரமாக விற்காமல் ஏழைகளுக்காக வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மாபெரும் தேசிய சேவை. நானும் ஒரு அணிலாக இந்த சேவையில் பங்கேற்க இங்கு வந்துள்ளேன்.

அன்பும் பாசமும்

அன்பும் பாசமும்

தற்போது இன்னொரு தலைமுறை இங்கே வந்து அதே பாசத்துடன், அன்புடன் பழகுவதை இங்கு கண்டேன். இந்த தலைமுறையும் பெரிய வெற்றி பெறும் என்பதை இவர்களது அணுகு முறையில் கண்டு கொண்டேன். இந்த விழாவுக்கு வந்து இருக்கும் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். வாய்ப்பு அளித்த பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.

சிவகார்த்திக்கேயன் பேச்சு

சிவகார்த்திக்கேயன் பேச்சு

விழாவில் பேசிய சிவகார்த்திக்கேயன், நான் 7 வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் வந்தேன். அப்போது இந்த அளவுக்கு நண்பர்கள் இல்லை. இப்போது இவ்வளவு பெரிய நண்பர்கள் கூட்டம் நிறைந்து இருக்கிறது.

கம்யூட்டர் சயின்ஸ்

கம்யூட்டர் சயின்ஸ்

நானும் என்ஜீனியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். படித்த பிறகுதான் தெரிந்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் எனக்கு வராது என்று. எனவே அதை சமாளிக்க திரை துறைக்கு வந்துள்ளேன்.

சாதனையாளராக காரணம்

சாதனையாளராக காரணம்

சாதாரணமாக இருந்த என்னை அனைவருக்கும் தெரிந்த சாதனையாளராக மாற்றியது தினத்தந்தி. அதற்கு காரணமானவர் உங்கள் அய்யாதான். ஒவ்வொரு துறையிலும் அவர் படைத்த சாதனைகள் பெரியது. அதை என்னால் சொல்ல முடியாது.

பணிவு கற்றுக்கொண்டேன்

பணிவு கற்றுக்கொண்டேன்

இளைய அய்யாவை துபாய் நிகழ்ச்சியில் நேரில் சந்தித்து இருக்கிறேன். மிகப் பெரிய ஒரு மனிதர். பணிவுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் என்றார் சிவகார்த்திக்கேயன்.

ஹன்சிகாவின் தமிழ்

ஹன்சிகாவின் தமிழ்

நான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுவேன். இந்த வரவேற்பு, இவ்வளவு பெரிய கூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றார் ஹன்சிகா. ‘தினத்தந்தி' பத்திரிகையை நான் தினசரி பார்ப்பேன். எங்களைப் போன்றவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் வரவேற்பு மிகப் பெரியது என்றும் கூறினார்.

மொழி பெயர்த்த சிவகார்த்திக்கேயன்

மொழி பெயர்த்த சிவகார்த்திக்கேயன்

நடிகை ஹன்சிகா விழாவில் எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் பேச்சை தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசியதை நடிகர் சிவகார்த்திகேயன் மொழி பெயர்த்தார். ஹன்சிகா பேசி முடிக்கும் போது ரசிகர்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார்.

ரசிகர்கள் அடித்தாலும்

ரசிகர்கள் அடித்தாலும்

ரசிகர்கள் அடித்துக்கொண்டாலும் கமல் ஹாசனும் சிவகார்த்திக்கேயனும் விழாவில் ஒரே மேடையில் ஒன்றாக பங்கேற்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
As fans of Kamal clashed with actor Shivakarthikeyan in Madurai, the actor shared the stage with the legendary actor Kamal in Tuticorin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil