வாட்டர் மெலன் ஸ்டார் முதல் அரோரா வரை.. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வேற ஆளே இல்லையா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. மொத்தம் 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் பலரும் பார்ப்பார்கள். கடந்த சீசனிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்டில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பலூன் அக்கா அரோரா உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எப்படி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறதோ அதேபோல் தமிழிலும் பெற்றிருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியது. முதல் சீசனிலேயே ஓவியா உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் சென்சேஷன் ஆனார்கள். அப்போதிருந்த இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. தொடர்ந்து நடந்த ஏழு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி இன்: சூழல் இப்படி இருக்க எட்டாவது சீசனிலிருந்து அவர் விலகினார். அவரையடுத்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி உள்ளே வந்தார். கமல் அளவுக்கு இல்லையென்றாலும் தன்னுடைய ஸ்டைலில் படு இயல்பாகவும், சுவராஸ்யமாகவும் நிகழ்ச்சியை அவர் கொண்டு செல்வது பலரையும் கவர்ந்தது. அதேசமயம் அவர் விலகிக்கொள்ளலாம் என்ற கருத்துக்களும் எழாமல் இல்லை.

பிக்பாஸ் சீசன் 9: தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நாளை முதல் தொடங்குகிறது. இதனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில், விக்கல்ஸ் விக்ரம், பலூன் அக்கா அரோரா, கனி திரு, கம்ருதின், விஜே பார்வதி, விஜே ஷோபனா, பிரவீன் ராஜ் தேவசகாயம், மாலினி ஜீவரத்தினம், சபரிநாதன், வியானா, பிரவீன் காந்தி, அப்சரா, வினோத் பாபு, ஜனனி அசோக்குமார், வியாஷாலி, ரோஷன், ரம்யா ஜோ, மஞ்சுநாதன், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
இவங்க போட்டியாளர்களா?: கடந்த சீசனில் போட்டியாளர்கள் கலந்துகொண்டபோதே பெரிய பிரபலம் இல்லாதவர்களை பிடித்து போட்டிருக்கிறார்களே என்று முணுமுணுப்புகள் எழுந்தன. தற்போது இந்த சீசனுக்கும் அது எழுந்திருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் சிலர்தான் பிரபலமானவர்கள். அதுவாவது பரவாயில்லை சர்ச்சைக்குரியவர்களையும் இந்த சீசனில் போட்டியாளர்களாக போட்டிருக்கிறார்களே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்கிறார்கள்.
விளாசும் ரசிகர்கள்: அதுமட்டுமின்றி வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கடந்த சில காலமாகவே சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார். ஜி.பி முத்து, சூரி உள்ளிட்டோரை எல்லாம் தரக்குறைவாக பேசினார். அவரை வளர்த்துவிடவேகூடாது என்று அனைவருமே சொல்லிவரும் நிலையில் அவரை போட்டியாளராக்கியிருப்பது மீண்டும் அவர் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். அதேபோல் பலூன் அக்கா அரோரா என்பவரும் ஆபாசமான முறையில் பேசி சர்ச்சையில் சிக்கியவர். இவர்களை தவிர்த்து விஜய் டிவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று விளாசிவருகிறார்கள். மேலும் இவர்கள் எல்லாம் சேர்ந்து என்னென்ன கூத்து அடிக்கப்போகிறார்களோ என்றும் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











