Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 6 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 7 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாவை மிரட்டிய கொடூர கொரோனா .. விஜய், அஜித் படங்கள் இல்லாத 2020.. சோலோவாக அசத்திய யோகிபாபு!
சென்னை: விஜய், அஜித் படங்கள் வெளியாகாமலேயே இந்த வருடம் கடந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் விஜய், அஜித் படங்கள் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.
பிரச்சாரம் பண்றீங்களா? இல்ல உள்ள இருக்கிறவங்களை சொல்றீங்களா? கமலால் குழம்பும் நெட்டிசன்ஸ்!
பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் ஹீரோக்கள் படங்கள் ரிலீஸ் ஆனால்தான், ரசிகர்களுக்கு பண்டிகை கால திருப்தி இருக்கும் என்பார்கள்.

உயிர்க்கொல்லி
கட் அவுட் வைத்து, விசிலடித்து ஆர்ப்பாட்டமாகப் படம் பார்க்க வேண்டும் அவர்களுக்கு. ஆனால், இந்த வருடம் டாப் ஹீரோ படங்களுக்கு மொத்தமாகத் தடை விதித்துவிட்டது, கண்ணுக்குத் தெரியாத உயிர்க் கொல்லி கொரோனா. இந்த வைரஸ் பரவல் காரணமாக, அதிகமாகப் பாதிக்கப்பட்டது சினிமா துறை.

ரஜினியின் தர்பார்
பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன. ஷூட்டிங் தடைபட்டன. தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டன. ஒட்டுமொத்தமாக சினிமா துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் பட டாப் ஹீரோக்களின் படங்கள் இந்த வருடம் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த ஜனவரி மாதம் ரஜினியின் தர்பார் மட்டும் ரிலீஸ் ஆகி இருந்தது.

விஜய்யின் மாஸ்டர்
அந்தப் படத்தை அடுத்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது, விஜய்யின் மாஸ்டர். ஆனால், மார்ச் மாத இறுதியில் இருந்தே லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு விட்டது. இதனால், ரத்து செய்யப்பட்ட மாஸ்டர் ரிலீஸ், பொங்கலுக்கு தள்ளிப் போய் இருக்கிறது.

அஜித்தின் வலிமை
சூர்யா, தனது சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அஜித்தின் வலிமையை கடந்த தீபாவளிக்கு திரையிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அடுத்த வருடத்துக்குச் செல்கிறது, வலிமை ரிலீஸ். வழக்கமாக அதிக படங்களில் நடிப்பவர் விஜய் சேதுபதி.

முன்னணி ஹீரோ
அவர் நடித்த படங்கள் இரண்டு மட்டுமே (ஓ மை கடவுளே, க/பெ ரணசிங்கம்) இந்த வருடம் வெளியாகி இருக்கிறது. தனுஷ் நடித்த பட்டாஸ், ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதுவும் இந்த வருடம் வெளியாகவில்லை என்றாலும் அதிகமான படங்களில் நடித்தவர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார், காமெடி நடிகர் யோகிபாபு.

அதிக படங்கள்
இந்த வருடத் தொடக்கத்தில் வெளியான ரஜினியின் தர்பார் தொடங்கி சில நாட்களுக்கு முன் ரிலீஸான கன்னிராசி வரை, ஒன்பது படங்களில் யோகிபாபு நடித்திருக்கிறார். டாப் ஹீரோக்கள் படங்கள் இல்லாத இந்த வருடத்தின் குறையை அடுத்த வருடம் தீர்க்கும் என்று நம்புகிறார்கள், ரசிகர்கள். இதற்கிடையே புதிய வகை கொரோனா தொற்றும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது, ஆக்ரோஷமாக!