»   »  பிசுபிசுத்துப் போன நட்சத்திர கிரிக்கெட்: விஷால் அன்ட் கோவின் முதல் தோல்வி

பிசுபிசுத்துப் போன நட்சத்திர கிரிக்கெட்: விஷால் அன்ட் கோவின் முதல் தோல்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி பிசுபிசுத்துப் போயுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னையில் கட்டிடம் கட்ட நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தினால் நிச்சயம் பெரிய தொகை சேரும் என்று நடிகர் சங்கத்தினர் நினைத்து அறிவிப்பு வெளியிட்டனர்.

ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்ற அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாவதற்கு பதில் கடுப்பாகினர்.

நாங்க ஏன்?

நாங்க ஏன்?

நீங்கள் கட்டிடம் கட்ட நாங்க ஏன் பாஸ் பணம் கொடுக்கணும். நடிகர்களாகிய உங்களிடம் இல்லாத பணமா எங்களிடம் உள்ளது என்று மக்கள் சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கருத்து தெரிவித்தனர்.

அதிருப்தி

அதிருப்தி

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது நடிகர்கள் மக்களுக்கு பிஸ்கட் கொடுத்தீர்கள். பதிலுக்கு பிஸ்கோத்து வேண்டும் என்றால் தருகிறோம், பணம் எல்லாம் தர முடியாது என்று ரசிகர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அஜீத்

அஜீத்

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று அஜீத் தெரிவித்தார். அவரது பேச்சை கேட்ட மக்கள் தல சொல்வது தான் சரி என்று ஆமோதித்தனர். இந்நிலையில் போட்டி நடக்கும் மைதானம் பார்வையாளர்கள் இன்றி காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.

கட்டிடமா?

கட்டிடமா?

இன்று சேப்பாக்கத்தில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் என்ன கக்கூஸ் கூட கட்ட முடியாது என்று மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்களை விட விளையாடும் வீரர்கள் அதிகமாக இருப்பதாக கிண்டல் செய்யப்படுகிறது.

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

ரஜினியும், கமலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை காண வருவார்கள் என்று கூறினால் அவர்களின் ரசிகர்கள் மைதானத்தில் வந்து கூடிவிடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் ரஜினி, கமலால் கூட கூட்டத்தை வரவழைக்க முடியவில்லை.

English summary
Fans have distanced themselves from Natchathira cricket league. Fans are busy trolling the matches on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil