சத்தமில்லாமல் கமெண்ட் கொடுத்து, கவுண்டர் கொடுத்த இமான் அண்ணாச்சி

சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பாதி பகுதியை நிறைவு செய்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் அபிஷேக் ராஜா வைல்ட்கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார்.

47 வது நாளில் அபிஷேக் ராஜா வைல்ட்கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், 50 வது நாளில் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

நடன திறமையை சோதித்த பிக்பாஸ்

நடன திறமையை சோதித்த பிக்பாஸ்

50 வது நாளில், வேக்அப் சாங்கை ஒலிக்கும் போது ஒரு சிலரை தவிர மற்றவர்கள் நடனமாடுவது இல்லை என பிக்பாஸ் கூறுகிறார். இதனால் போட்டியாளர்களின் நடன திறமையை சோதிக்கும் வகையில், பாடல்கள் இசைக்கப்படும். அதற்கு ஜோடிகள் சரியாக நடனம் ஆடினால் பசர் ஒலிக்கும் என்றும், பாடலுக்கு ஏற்ற மாதிரி நடனம் ஆடவில்லை என்றால் ஊளையிடுவது போன்ற இசை ஒலிக்கப்படும் என்றும் பிக்பாஸ் அறிவித்தார்.

 அமீர் என்ட்ரி

அமீர் என்ட்ரி

அதன்படி போட்டியாளர்கள் நடனம் ஆடி முடித்ததும், பல பேருக்கு சரியாக நடனம் ஆட தெரியவில்லை. அதனால் இந்த வீட்டிற்கு ஒரு நடன இயக்குனர் தேவை என்ற பிக்பாஸ் அறிவிப்புடன், வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் அமீர். இதற்கு பிறகு லக்சுரி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.

கவுன்ட்டர் கொடுத்த அண்ணாச்சி

கவுன்ட்டர் கொடுத்த அண்ணாச்சி

இதில் இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்கள் மாணவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சத்தமில்லாமல் கவுன்ட்டர் கொடுத்து, இமான் செய்த காமெடி அனைவரையும் சிரிக்க வைத்தது.

எக்ஸ்டிரா ரவுண்டு கொடுங்க

எக்ஸ்டிரா ரவுண்டு கொடுங்க

ஃபிட்னஸ் மானிட்டரான அக்ஷரா, உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கிறார். ஆனால் பிரியங்கா முழங்கால் வலி என கூறி எதையும் செய்ய மறுக்கிறார். அப்போது அக்ஷரா, உங்களுக்கு ரவுண்டு இருக்கு என்கிறார். இதற்கு மாணவர்கள் வரிசையில் நிற்கும் இமான் அண்ணாச்சி, என்னது ரவுண்ட் எல்லாம் இருக்கா. அப்படியானால் எக்ஸ்ட்ரா இரண்டு கொடுக்க சொல்லுங்க. எல்லோரும் போடுவோம் என்கிறார்.

 சோறு கிடையாது

சோறு கிடையாது

பிறகு பிரியங்கா பற்றி வார்டனான சிபியிடம் புகார் கூறுகிறார் அக்ஷரா. அதற்கு சிபியும் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு, எதுவும் செய்ய பிடிக்காது என்றால் சாப்பிட பிடிக்குமா என கேட்கிறார். பிரியங்காவும் ரொம்ப பிடிக்கும் சார் என்கிறார். அப்படியானால் உங்களுக்கு தண்டனை என சிபி நிறுத்த, குறுக்கிடும் இமான், இன்னிக்கு உனக்கு சோறு கிடையாது என்கிறார்.

 சினிமா பாட்டு எழுதிய பிரியங்கா

சினிமா பாட்டு எழுதிய பிரியங்கா

சிபி, இல்லை சோறு இருக்கு. உங்களுக்கான தண்டனை என மீண்டும் நிறுத்த, மீண்டும் இமான், நிறைய சாப்பிட வேண்டும் என்கிறார். ஆனால் சிபி, யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி விட்டு போகிறார். இதே போல் சினிமா பாடல் எழுதியதாக பிரியங்காவை சிபி கண்டிக்கும் போது, மேஜை மீது நின்றபடி என்ன பாட்டு எழுதினாய் என கேட்கிறார் அண்ணாச்சி.

கதவ மூடுங்கடா

கதவ மூடுங்கடா

அதற்கு பிரியங்காவும் சென்னை 28 பட பாடலான, நல்லா வாசிங்கடா பாடலை வசனமாக சொல்லிக் கொண்டே கார்டன் ஏரியாவிற்கு செல்கிறார். அதை கவனித்துக் கொண்டிருந்த இமான் அண்ணாச்சி, கதவ மூடுங்கடா என கிண்டல் செய்கிறார். இதை ரசிகர்களை பெரிதும் ரசித்துள்ளனர்.

Recommended Video

கிராமத்து மக்களுக்கு Hotstar ல vote போட தெரில | Imman Annachi Brother Selvakumar | Filmibeat Tamil
ராஜுவை கலாய்த்த இமான்

ராஜுவை கலாய்த்த இமான்

அசம்பிளியில் அனைவரும் நிற்கும் போது, ஆங்கிலத்தில் பேசினால் தண்டனை என்கிறார் சிபி. ஆனால் தமிழ் ஆசிரியராக ராஜு, ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கூட்டத்தில் நிற்கும் இமான், தமிழ் வாத்தியார் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார். அவர் மட்டும் பேசலாமா என்கிறார். பிறகு மீண்டும் இந்த மாதிரி டிரெஸ் போட்டால் பேசலாம் போல என்கிறார். இதற்கு வருண், அபினய் உள்ளிட்டோர் சிரிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X