பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் எப்போ ? ...இது செம தகவலா இருக்கே
சென்னை : இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் அடுத்து வெயிட்டிங்கில் இருக்கும் படம் பொன்னியின் செல்வன். டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள இந்த படம் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படமாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளும் ஏறக்குறைய முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் முதல் பாகத்தின் மீதான ஆர்வத்துடன் சேர்த்து இரண்டாம் பாகத்தின் மீதான ஆர்வமும் பல மடங்காக அதிகரித்துள்ளது. ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் விதமாக முதலில் போஸ்டர்களை வெளியிட்டு வந்த படக்குழுவினர் தற்போது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த பொன்னி நதி
பொன்னியின் செல்வன் டீசரை தொடர்ந்து, நடிகர் விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பொன்னி நதி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

தமிழுக்கு மட்டும் ஸ்பெஷல்
பொன்னி நதி பாடல் படத்தின் இன்ட்ரோ சாங்காகவும், வந்தியத் தேவனின் இன்ட்ரோ சாங்காகவும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து, பாடி உள்ளார். நாட்டுப்புற ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் அனைத்து மொழியினரும் ரசிக்கும் வகையில் ஒரே மாதிரியான இசையில் அமைக்கப்பட்டுள்ளது.தமிழில் இன்னும் ஸ்பெஷலாக தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைக் கொண்டு இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த பாடல் எப்போ
படத்தின் அடுத்த பாடல் என்ன, எப்போ வெளியிடுவார்கள், இது லவ் சாங்கா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வரும் நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய புதிய தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மை தானா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

ஆடியோ எப்போ ரிலீஸ் பண்ணுவாங்க
லேட்டஸ்ட் தகவலின் படி பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னை அல்லது தஞ்சையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆஹா...செம தகவலா இருக்கே
கோலிவுட்டில் இதுவரை நடக்காத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்காக அழைக்கப்பட விஐபி.,க்கள் லிஸ்டில் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆடியோ வெளியீட்டிற்கு பிறகு இனி அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே
ஆனால் ஆகஸ்ட் முதல் வாரம் என்றால், முதல் வாரம் முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய விழாவிற்கான தேதியை இதுவரை முடிவு செய்து அறிவிக்காமல் இருப்பார்களா அல்லது விஐபி.,க்களுக்கு அழைப்பு போகாமல் இருக்குமா? இதெல்லாம் நம்புற மாதிரி தெரியலியே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய தகவலால் ட்விட்டரில் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











