twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, ரஞ்சித் வெர்ஷன் 2.0 – ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

    |

    கபாலி தந்த உலக லெவல் வெற்றியால் சூப்பர் ஸ்டார் ரஜினி - ரஞ்சித் காம்பினேஷன் அறிவிக்கப்பட்ட உடனேயே பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது. அப்படி ரசிகர்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எட்டு விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறது இணையதளம் ஒன்று. முதல் நான்கு கபாலியில் இருந்தவை. அடுத்த நான்கும் புதிய விஷயங்கள்.

    சந்தோஷ் நாராயணன்

    சந்தோஷ் நாராயணனின் இசை கபாலி படத்தின் மிகப் பெரிய பலம். நெருப்புடா... என்று அதிர வைத்ததில் இருந்து மாயநதியாக உருக வைத்தது வரை சந்தோஷின் வர்ணஜாலங்கள் கபாலியைக் கொண்டாட வைத்தது. ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸுக்கு பின்னணி இசையமைப்பது சிரமமான ஒன்று. அதனை இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு சிறப்பாக செய்திருந்தார் சந்தோஷ் நாராயணன். எனவே அவரே இசையமைக்க வேண்டும்.

    வயசைக் குறைக்க வேண்டாம்

    வயசைக் குறைக்க வேண்டாம்

    சூப்பர் ஸ்டார் கபாலியில் கேங்ஸ்டராக நடித்திருந்தாலும் படத்தில் அவரது வயதை ஒத்த தோற்றம்தான் வழங்கப்பட்டது. அதுதான் படத்தின் யுஎஸ்பி. வயதான டான் பாத்திரத்தை அவ்வளவு அழகாக செய்திருந்தார் ரஜினி. அந்த மேஜிக் அடுத்த படத்திலும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

    பெண்களுக்கு முக்கியத்துவம்

    பெண்களுக்கு முக்கியத்துவம்

    ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தி முதலே தனது படங்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார். கபாலியிலும் அது தொடர்ந்தது. ரஜினிக்கு சமமான முக்கியத்துவம் ராதிகா ஆப்தேவுக்கும் தன்ஷிகாவுக்கும் கொடுக்கப்பட்டது. இதுதான் குடும்ப ரசிகர்களை கபாலி கவர முக்கிய காரணம். அதுவும் தொடர வேண்டும் என்கிறார்கள்.

    கதை தான் முக்கியம்

    கதை தான் முக்கியம்

    கபாலி படத்தில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார் ரஞ்சித். அதாவது முழுக் கதையும் ரஜினி மேல் பயணிப்பது மாதிரி. காட்சிகளையும் மிக இயல்பாக அமைத்திருந்தார். ரஜினியின் சமீபத்திய படங்களில் இத்தனை இயல்பான சிம்பிளான கதை எந்த படத்திலும் அமைந்த்தில்லை என்று சொல்லும் அளவுக்கு கதை இருந்தது.

    இன்னும் கொஞ்சம் மாஸ்

    இன்னும் கொஞ்சம் மாஸ்

    படம் இயல்பாக அமைந்திருந்தாலும் 'தலைவர்' ரஜினிக்கே உரிய மாஸ் கொஞ்சம் கம்மியாகத்தான் இருந்தது. அடுத்த படத்தில் அதை கொஞ்சம் சேர்க்கலாம் என்கிறார்கள். ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு மாஸ் இருக்க வேண்டும்.

    வி.எஃப்.எக்ஸ் கவனம்

    வி.எஃப்.எக்ஸ் கவனம்

    கபாலியின் மலேசிய காட்சிகளின் லொக்கேஷன்களில் நம்மை அறியாமல் ஒரு செயற்கை தெரிந்தது. அது வி.எஃப்.எக்ஸ் குறைபாடு. மேக்கப் உள்ளிட்ட வி.எஃப்.எக்ஸ் விஷயங்களில் அடுத்த படத்தில் எந்த குறையும் இல்லாத மாதிரி வேலை பார்க்க வேண்டும்.

    வில்லன்கள்

    வில்லன்கள்

    ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோக்களுக்கு அவருக்கு நிகரான வில்லன் கதையில் இருக்க வேண்டும். ஆனால் கபாலியில் வில்லன்கள் இருவருமே பெரிதாக மிரட்டவில்லை. ரஜினி - ரகுவரன் காம்பினேஷன் மாதிரி வில்லன்கள் ஸ்ட்ராங்காக அமைய வேண்டும்.

    ஓப்பன் ப்ளாட்

    ஓப்பன் ப்ளாட்

    கதையின் அடித்தளம் என்னவோ அதை நேர்மையாக சொல்லிவிடுவது நல்லது. டீசரில் ஒரு மாஸ் படம் போல காட்டிவிட்டு, கிளாஸ் படமாக காட்டியதால்தான் முதலில் ரசிகர்கள் சற்று ஏமாந்தார்கள். இது அடுத்த படத்தில் தொடரக்கூடாது.

    இத்தனையும் பட்டியலிட்ட இணையதளம் ஒன்றை மட்டும் விட்டுவிட்டது. அது கலைப்புலி தாணு போன்ற ஒரு சிறந்த மார்க்கெட்டர்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்.. வசூல் விபரத்தை நேர்மையாகச் சொல்லி ரசிகர்களின் பரிதவிப்பைப் போக்க வேண்டும் என்பது...!

    English summary
    Here is the list of expectation for Rajini - Ranjith's next movie after blockbuster Kabali.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X