»   »  பாசக்கார பயபுள்ளைக: கேக் வெட்டி அஜீத் பேனருக்கு ஊட்டிவிட்ட மதுரை ரசிகர்கள்

பாசக்கார பயபுள்ளைக: கேக் வெட்டி அஜீத் பேனருக்கு ஊட்டிவிட்ட மதுரை ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையை சேர்ந்த அஜீத் ரசிகர்கள் அவரது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி அவரின் பேனருக்கு ஊட்டி மகிழ்ந்துள்ளனர்.

தல அஜீத்தின் 45வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்து, கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, கேக் வெட்டி மக்களுக்கு அளித்து ரசிகர்கள் அஜீத்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

Fans feed cake to Ajith's banner

ட்விட்டர், ஃபேஸ்புக்கிலும் அஜீத்துக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளது.

மதுரை

மதுரையில் உள்ள அஜீத் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டியுள்ளனர். கேக் வெட்டியவர்கள் அதில் ஒரு துண்டை அஜீத்தின் பேனருக்கு ஊட்டி மகிழ்ந்துள்ளனர்.

அன்னதானம்

அஜீத்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் அன்னதானம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Fans of Ajith Kumar have fed a piece of cake to Thala's banner in Madurai on his birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil