ஷ்ஷ்ஷ்...யப்பா...இன்னும் முட்டை டாஸ்க் முடியலியா...டென்ஷனாகும் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அடுத்தடுத்த திருப்பங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வெற்றி பெற்று, டிக்கெட்டை வென்று, நேரடியாக இறதிப் போட்டிக்கு சென்று விட்டார் அமீர். மீதமிருந்த 7 பேரில் சஞ்சீவ் நேற்று வெளியேற்றப்பட்டார்.

ஆர்வத்தில் ரசிகர்கள்
இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடத்தப்படும் என்பதால் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போவது யார், நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட போவது யார், இறுதி வாரத்திற்குள் நுழைந்து ஃபைனலில் டைட்டிலை வெல்ல போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

கடுப்பேற்றும் ப்ரோமோக்கள்
ஆனால் இன்றைய 92 வது நாளின் எபிசோடிற்காக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோக்கள் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் ஓப்பன் நாமினேஷன் நடத்தப்படுகிறது. இதில் நாமினேட் செய்பவருக்கு மாலை அணிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதிலும் தாமரை - பிரியங்கா இடையே வாக்குவாதம், பிறகு கட்டிப்பிடித்து கொள்வது நடக்கிறது.

மறுபடியும் முதல்ல இருந்தா
இரண்டாவது ப்ரோமோவில் முட்டை டாஸ்க் பற்றி தாமரை, அமீர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. டீம் பிளான் பண்ணி விளையாடிதை ஒப்புக் கொண்டு, அதனை நியாயப்படுத்தியும் பேசுகிறார் அமீர். ராஜுவின் முட்டையை ஏன் நீ உடைக்கவில்லை. நீ பேசுவதை நியாயப்படுத்தாதே என்கிறார் தாமரை.

சும்மா கத்தாதீங்க
சும்மா கத்தாதீங்க அக்கா. என்னை ஏன் கேட்குறீங்க. என்னை கேட்க உங்களுக்கு உரிமையில்லை என கத்துகிறார் அமீர். என்னை கேட்க உனக்கும் உரிமை இல்லை என கத்துகிறார் தாமரை. இந்த ப்ரோமோக்களை பார்த்து விட்டு ரசிகர்கள் எரிச்சலுடன் கமெண்ட் செய்துள்ளனர்.

இன்னும் முடியலயாடா
இன்னும் முட்டை டாஸ்க் முடியலியா. எப்படா முடிப்பீங்க. முடியல. இன்னுமாடா இந்த பிரச்சனை முடியல. நான் ஃபைனலுக்கு போய்டேன்ல என தெனாவெட்டுடன் அமீர் பேசுவதை போல் தெரிகிறது. இந்த வாரம் தாமரை தான் வெளியே போவார் என நினைக்கிறேன். என்ன வாய்டா இது இந்த கிழி கிழிக்குது. நாடக கலைஞருக்கும் நடன கலைஞருக்கும் சண்டை என கண்டபடி கமெண்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











