Don't Miss!
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லோரட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Lifestyle
Today Rasi Palan 21 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடலாம்...
- News
மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய பாஜக எம்பி? விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
தனுஷ் பிறந்தாநாளுக்கு ஒன்னு இல்ல...பல ட்ரீட் காத்திருக்கு...ஃபேன்ஸ் ரெடியாகுங்க
சென்னை : தமிழ் சினிமாவில் தடம் பதிக்காத இடமே இல்லை என சொல்லும் அளவிற்கு நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், பாடகர் என பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்து வருபவர் தனுஷ்.
தனது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன் போன்ற படங்கள் தனுஷிற்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்தன.
படிப்படியாக வளர்ந்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார் தனுஷ். இவர் தனது 39வது பிறந்தநாளை ஜுலை 28 ம் தேதி கொண்டாட உள்ளார்.இதுனை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பல ட்ரீட்கள் காத்துக் கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு கயிறு..ஒரு முடிச்சு..தர்ஷா குப்தாவின் ஜாக்கெட் ஸ்பெஷல்..திணறும் இணையம்!

அடுத்த தனுஷ் படம் என்ன
கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த தி கிரே மேன் படம் சமீபத்தில் ரிலீசானது. தமிழில் கடைசியாக தனுஷ் நடித்து தியேட்டரில் ரிலீசான படம் கர்ணன். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று, ஓரளவிற்கு வசூலையும் பெற்றது. அதற்கு பிறகு தனுஷ் நடித்த மாறன் படம் ஓடிடி.,யில் ரிலீசாகி படுதோல்வி அடைந்ததுடன், அதிகமான நெகடிவ் விமர்சனங்களை பெற்றது.

பிறந்தநாளுக்கு என்ன ஸ்பெஷல்
தற்போது தனுஷ் பல படங்களில் நடித்து வருவதால் அடுத்து அவர் நடித்த எந்த படம் முதலில் வர போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதனால் தனுஷ் பிறந்தநாளில் அவர் நடிக்கும் படங்களில் என்ன அப்டேட் வர போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

என்னது இத்தனை ட்ரீட்டா
லேட்டஸ்ட் தகவலின் படி, தனுஷ் பிறந்தநாளன்று அவரது ரசிகர்களுக்கு ஒன்றல்ல பல ட்ரீட் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பிறந்த நாளுக்கு முந்தைய தினமான ஜுலை 27 அன்று திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் மற்றும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகியன வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 நாட்கள் கொண்டாட்டமா
இதைத் தொடர்ந்து தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28 அன்று வாத்தி டீசர், நானே வருவேன் டீசர் அல்லது டிரைலர், கேப்டன் மில்லர் அப்டேட், எலன் பட அறிவிப்பு ஆகியன வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதோடு முடியவில்லை, ஜுலை 29 அன்று தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆச்சரியத்தில் கோலிவுட்
பொதுவாக பெரிய நடிகர்கள் பிறந்தநாள் என்றால் முதல்நாள் மற்றும் பிறந்தநாள் அன்று மட்டும் தான் ஸ்பெஷல் அறிவிப்புக்கள் வந்து ரசிகர்களை கொண்டாட வைக்கும். ஆனால் தனுஷ் பிறந்தநாளை மூன்று நாள் கொண்டாட்டமாக கொண்டாட போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தையும் தந்துள்ளது.